அதுவரை மிகுந்த சாந்தமாக இருந்த கிஷோரின் தம்பி துருவா, தனது அண்ணனை கொன்றவர்களை கொன்று தீர்ப்பேன் என்று சபதமேற்கிறார். இறுதியில், துருவா தனது அண்ணனை கொன்றவர்களை கொன்று தீர்த்தாரா? அல்லது எதிரிகள் இவரைக் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.
கிஷோர் மிடுக்கான தோற்றம், அருமையான வசன உச்சரிப்பு, அலட்டாத நடிப்பு போன்றவற்றால் ரசிகர்களை கவர்கிறார். நாயகன் துருவா முதல் பாதியில் அண்ணன் பேச்சை தட்டாத பாசமான தம்பியாக நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். இரண்டாவது பாதிக்கு பிறகு மிரட்டலான தோற்றத்தில் வலம் வந்து மிரட்டுகிறார். தனது அண்ணனின் மகன் மீது பாசம் காட்டுவது, அவனுக்காக துடிப்பது போன்ற காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி மிருதுளா பாஸ்கருடனான காதல் காட்சிகளிலும் மென்மையாக பதிந்திருக்கிறார்.
நாயகி மிருதுளா பாஸ்கருக்கு இப்படத்தில் காதல் காட்சிகள் மிக குறைவு. இருப்பினும், தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் ‘பூ’ ராம் கிராமத்து வில்லனாக மிரட்டியிருக்கிறார். இவர் நடிப்பில் உக்கிரபாண்டியன் கதாபாத்திரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.
படத்தில் வன்முறை அதிகம் என்பதால் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வன்முறை என்றுமே அமைதியான சூழலுக்கு வழிகாட்டாது என்பதையும் பழிவாங்கும் உணர்வு மனிதனை நிம்மதியாக வாழவிடாது என்பதையும் படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பெருமாள் பிள்ளை. படத்தின் இறுதிக் காட்சியை இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாம். இசையமைப்பாளர் கண்ணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. படத்தில் ஒளிப்பதிவாளர் ராஜேஸ் யாதவின் கேமரா கிராமத்து அழகை நன்றாக பதிவு செய்துள்ளது. சண்டைக்காட்சிகளில் அசத்தலாக ஒளிப்பதிவு.
மொத்தத்தில் ‘திலகர்’ அதிரடி……….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே