பிசிஎம் அந்த கல்வெட்டை பார்த்து, காளி கோவிலுக்கு உள்ளே சாமி சிலைக்கு கீழே பல லட்சம் மதிப்புள்ள புதையல் இருப்பதை அறிகிறார். இந்தப் புதையலை யாருக்கும் தெரியாமல் அபகரிக்க திட்டமிட்டு மீடியா குழுவினருடனே சேர்ந்து தொகை மலைக்கு செல்கிறார். இவர்கள் தோகை மலைக்கு செல்லும் வழியில் குழுவில் உள்ள ஒரு பெண் மர்மான முறையில் கொல்லப்பட்டு காணாமல் போகிறார். இதனால் அவர்கள் அதிர்ந்து போகின்றனர். இதன் தொடர்ச்சியாக மற்றொரு நபரும் கொலை செய்யப்பட்டு காணாமல் போகிறார். இதன்பிறகு குழுவில் உள்ள சிலர் தோகை மலைக்கு செல்ல தயங்குகின்றனர்.
இறுதியில் இந்த கொலைகளை செய்தது யார்? பிசிஎம் புதையலை எடுத்தாரா? நிர்வாண பூஜையின் மர்மங்கள் கண்டறியப்பட்டதா? என்பதே மீதிக்கதை. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள். அனைவரும் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். தெரிந்த முகங்கள் என்று சொன்னால் மனோபாலா மற்றும் ஆர்த்தி. இவர்களை வைத்து தனி டிராக்காக காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அது பெரிதாக எடுபடவில்லை. ஆராய்ச்சியாளராக வரும் பிசிஎம் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
கோவில், புதையல், மர்மம் என்று பழைய கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் சாய்ராம் அதில் திகில் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய தேவையற்ற காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. திரைக்கதையை நாடகம் போல் காட்சியமைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் இயக்குனர் தவிர்த்திருக்கலாம். நிறைய கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து அவர்களை திறமையாக வேலை வாங்கியிருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். அரா-பிசிஎம்மின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை மட்டுமே ரசிக்க முடிகிறது. மனோஜ் நாராயன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சொன்னா போச்சு’ தேடல்…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே