அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லும், சங்கக்கராவும் சதம் அடித்தனர். இதன் மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அதிக சதங்கள் அடிக்கப்பட்ட உலக கோப்பை இது தான்.

இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் 24 சதங்கள் எடுக்கப்பட்டதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. அச்சாதனை இப்போது லீக் சுற்றின் போதே உடைக்கப்பட்டு விட்டது. இந்த உலக கோப்பையில் இலங்கை 6 சதங்களும், தென்ஆப்பிரிக்கா 5 சதங்களும், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா தலா 3 சதங்களும், இந்தியா, இங்கிலாந்து தலா 2 சதங்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து தலா ஒரு சதமும் சுவைத்துள்ளன. தொடர்ந்து 5 வெற்றிகளை குவித்துள்ள நியூசிலாந்து வீரர்களில் யாரும் சதம் பக்கமே நெருங்கவில்லை. ஒவ்வொரு உலக கோப்பையிலும் எடுக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:–

1975-6 சதம், 1979-2, 1983-8, 1987-11, 1992-8, 1996-16, 1999-11, 2003-21, 2007-20, 2011-24.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago