ஆஸ்திரேலிய நிபுணர்கள் தலைமையில் ஆழ்கடல் பகுதியில் 4 பெரிய கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை மையமாக வைத்து நடந்துவரும் இந்த தேடலில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனினும், இதுவரை ஒரு சிறு துரும்பு கூட கிடைத்தபாடில்லை. மீதமுள்ள ஆழ்கடல் பகுதியை தேடும் பணிகள் வரும் மே மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளையுடன் இந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி, இந்த கோரவிபத்து தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவினர் இன்னும் சில நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
விபத்தில் பலியான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், தேடுதலை தொடர நாங்கள் அர்ப்பணிப்புணர்வோடு இருக்கிறோம். ஆனால், அதற்கென இலக்கிட்டிருக்கும் இடத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பின்நோக்கி சென்று கையில் கிடைத்திருக்கும் ஆதாரங்களை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை வைத்து பார்க்கையில், இதுவரை தேடுதல் வேட்டையில் மலேசிய அரசு வெற்றி பெறவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பலியான பயணிகளுக்கு நாளை அஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே