மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வருகிற 8ம் தேதியுடன் விமானம் மாயமாகி ஒருவருடம் ஆக உள்ளது. இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் டோனி அபோட் பேசுகையில், மாயமான விமானத்தை தேடுவதில் எங்களுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு வெற்றிபெறும் என்று நாங்கள் உங்களுக்கு(விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு) மீண்டும் உறுதிஅளிக்கிறேன். எப்போதும் இதே தீவிரத்துடன் தேடுதல் பணியில் ஈடுபடுவோம் என்று நான் வாக்குறுதி அளிக்க முடியாது, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரையில் விமானம் மாயமான பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். பதில் அளிப்போம். என்று கூறினார். ஏற்கனவே ஆஸ்திரேலியா துணை பிரதமர் வார்ரென் பேசுகையில், நாங்கள் எப்போதும் தெளிவாக தேடிக்கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டார்.
மாயமான விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் நடைபெற்று வந்தது. விமானத்தை தேடுவதில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் 60,000 சதுர கி.மீ. பரப்பளவில் கவனம் செலுத்துகிறது. இந்திய பெருங்கடலில் மிகவும் கடினமான பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெறுகிறது என்று டோனி அப்போட் தெரிவித்துள்ளார். விமானத்தை தேடுவதற்காக 93 அமெரிக்க டாலர் அளவில் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா சார்பில் இணையாக பட்ஜெட் போடப்பட்ட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே