தன்னையும், தனது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் அவர் தான் என்று நினைத்து திட்டியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் வேறு நிருபர் என்று தெரிந்ததும் விராட்கோலி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் விராட்கோலி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் குறித்து அந்த பத்திரிகை சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோலி விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளர் அனுராக் தாகூர் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினை குறித்து விராட்கோலி விளக்கம் அளித்துவிட்டார். உலக கோப்பை போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாகும். தவறான புரிந்து கொள்ளுதலால் நடந்த இந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு உலக கோப்பையில் இந்திய அணி கவனம் செலுத்துவது அவசியமானதாகும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதற்கிடையில் விராட்கோலி, நிருபரை தகாத வார்த்தைகளால் திட்டவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் மறுத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே