இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில்
அனேகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
5.
ஐ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த
ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ. 2,87,580 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.
சண்டமாருதம்:-
கடந்த வாரம் வெளியான
சண்டமாருதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 93 ஷோவ்கள் ஓடி ரூ.10,72,500 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:-
கடந்த வாரம் வெளியான
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 126 ஷோவ்கள் ஓடி ரூ. 26,05,806 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.
என்னை அறிந்தால்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த
என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 300 ஷோவ்கள் ஓடி ரூ. 50,51,568 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.
அனேகன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த
அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 296 ஷோவ்கள் ஓடி ரூ. 80,62,241 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.