நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ரகசியங்கள்!…

சென்னை:-கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ‘இளையதளபதி’ விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புலி’ படத்தில் முதல்முறையாக 3 வேடம் போட்டு அசத்தி வருகிறாராம் விஜய். இந்த செய்தியை ‘புலி’ படக்குழுவிலிருக்கும் நம்பத்தகுந்த நபர் ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.

இந்த 3 வேடங்களுமே ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாம். மன்னர் யுகம், டெக்னாலஜி யுகம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் ‘புலி’ படத்தில் ஒரு விஜய் குள்ள மனிதராகவும், இன்னொரு விஜய் ஓவியராகவும், மூன்றாவது விஜய் மாடர்ன் யூத்தாகவும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். ஆனால் மூன்றாவது விஜய்க்கு ஜோடி இருப்பதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் ஈசிஆரில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்றில் காமெடி நடிகை வித்யூலேகா ராமன் விஜய்யுடன் ஆடி அசத்தினார். தற்போது கேரளாவில் உள்ள மியூசியம் ஒன்றில் டெக்னாலஜி யுகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். விஜய்யும், ஸ்ருதிஹாசனும் இதில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago