செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித் தான் தற்போதையே ஓப்பனிங் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் திருவிழா தான். இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் கத்தி படத்தின் சாதனையை முறியடித்ததா?… என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

கத்தி திரைப்படம் முதல் வார இறுதியில்(5 நாட்கள்) தமிழகத்தில் ரூ 36 கோடி வசூல் செய்தது, ஆனால், என்னை அறிந்தால் (4 நாட்கள்) ரூ 32 கோடி வசூல் செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது விஜய், அஜித் இருவருமே சம பலத்தில் தான் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், லண்டனை பொறுத்த வரை கத்தி படத்தின் வசூலே உச்சத்தில் உள்ளது. என்னை அறிந்தாலுக்கு அங்கு மிக குறைந்த ஓப்பனிங் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி