உலககோப்பை இறுதிப்போட்டியில் சாதித்தவர்கள் – ஒரு பார்வை…

இதுவரை 10 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு உலககோப்பை இறுதிப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்:–

(வெஸ்ட் இண்டீஸ் 1975):-

முதல் உலக கோப்பை இறுதிப் போட்டியிலேயே சதம் அடித்தவர் கிளைவ் லாயிட். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 85 பந்தில் 102 ரன் (12 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அவரது அபாரமான ஆட்டத்தால் தான் வெஸ்ட் இண்டீஸ் 291 ரன் குவித்தது. 17 ரன்னில் வென்று கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்ததால் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.

(வெஸ்ட் இண்டீஸ், 1979):-

லார்ட்ஸ் மைதானத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தில் அனல் பறந்தது. இங்கிலாந்துக்கு எதிரான 2–வது உலக கோப்பை இறுதிப் போட்டியில் அவர் 157 பந்தில் 138 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ரிச்சர்ஸ்சின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 92 ரன்னில் சென்று கோப்பையை தக்க வைத்தது.

(இந்தியா 1983):-

ஆல்ரவுண்டரான மொகீந்தர் அமர்நாத் 1983 இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணியின் 3–வது அதிக பட்ச ஸ்கோரான 26 ரன்னை அவர் எடுத்தார். மேலும் 12 ரன் கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றியதால் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார் அவர். ஜான், மார்ஷல், ஹோல்டிங் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார்.

(ஆஸ்திரேலியா, 1987):-

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிக ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். தொடக்க வீரரான டேவிட்பூன் 75 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றார்.

(பாகிஸ்தான் 1992):-

ஆல்ரவுண்டரான வாசிம் அக்ரம் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 18 பந்தில் 33 ரன் எடுத்தார். 49 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஆலன்லேம்ப், லீவிஸ் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்ல காரணமாக விளங்கினார்.

(இலங்கை, 1996):-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரவிந்த் டி சில்வா 4–வது வீரராக களம் இறங்கி செஞ்சூரி அடித்தார். அவர் 124 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

(ஆஸ்திரேலியா, 1999):-

வார்னே தனது அபாரமான சுழற்பந்து வீச்சால் 1999 இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை திணறடித்தார். 33 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி பாகிஸ்தான் 132 ரன்னில் சுரண்டதற்கு காரணமாக திகழ்ந்தார்.

(ஆஸ்திரேலியா, 2003):-

இறுதிப் போட்டியில் இந்தியாவை நசுக்கி தள்ளினார். ஆஸ்திரேலிய கேப்டனாக அவர் 3–வது வீரராக களம் இறங்கி 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 121 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

(ஆஸ்திரேலியா 2007):-

இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடினார். தொடக்க வீரரான அவர் 129 பந்தில் 13 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 149 ரன்கள் குவித்தார்.

டோனி (இந்தியா 2011):-

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கினார். இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் மிகவும் அற்புதமாக விளையாடினார். யுவராஜ்சிங் இடமான 5–வது வீரர் வரிசையில் அவர் களம் இறங்கியது தான் திருப்புமுனை. 79 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 91 ரன் (அவுட் இல்லை) எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago