ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா):-
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர். உலகின் தலை சிறந்த பவுலர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேகம், சுவீங் மற்றும் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவர். பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர். மேட்ச் வின்னிங் பவுலர் ஆவார். 2011 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார். 31 வயதான ஸ்டெய்ன் 96 ஒரு நாள் போட்டியில் விளையாடி 151 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 39 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.
ஆண்டர்சன் (இங்கிலாந்து):-
4–வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் ஆண்டர்சன் எதிர் அணி வீரர்களை திணறிடிப்பதில் சிறந்தவர். ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் பந்து வீசக்கூடியவர். இங்கிலாந்து முதன்மை வேகப்பந்து வீரரான அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த ஆட்டத்தில் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். உலக கோப்பையில் 22 விக்கெட் (19 ஆட்டம்) எடுத்துள்ளார்.
அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். 32 வயதான அவர் 187 ஒரு நாள் போட்டியில் 262 விக்கெட் எடுத்துள்ளார். 23 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது அவரது 2 வீரராக சிறந்த பந்து வீச்சு ஆகும்.
ஜான்சன் (ஆஸ்திரேலியா):-
33 வயதான மிச்சேல் ஜான்சன் உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீரராக திகழ்கிறார். கடந்த ஆண்டில் ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதை பெற்றார். சமீபத்தில் நடந்த 3 நாடுகள் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை நசுக்கினார். 2011 உலக கோப்பையில் ஜிம்பாபவேக்கு எதிராக 19 ரன் கொடுத்து 4 விக்கெட்டும் நியூசிலாந்துக்கு எதிராக 33 ரன் கொடுத்து 4 விக்கெட்டும் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் 224 விக்கெட் (145 போட்டி) எடுத்துள்ளார். 31 ரன்னுக்கு 6 விக்கெட் சிறந்த பந்து வீச்சு ஆகும்.
ஸ்டார்க் (ஆஸ்திரேலியா):-
மிகவும் நேர்த்தியாக வீசக்கூடிய திறமை வாய்ந்த பவுலர் ஆவார். சமீபத்தில் நடந்த 3 நாடுகள் போட்டியில் அபாரமாக பந்து வீசினார். ஜான்சனுக்கு எல்லா வகையில் மறுமுனையில் இருந்து வீசக்கூடிய சிறந்த வேகப்பந்து வீரர் ஆவார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 61 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 43 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது. 25 வயதான ஸ்டார்க்கின் சிறந்த பந்து வீச்சு ஆகும். தரவரிசை: 7
மார்கல் (தென் ஆப்பிரிக்கா):-
ஸ்டெயினுடன் இணைந்து சிறப்பாக வீசக்கூடிய தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர். பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடிய உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவர். சமீப காலங்களில் சிறப்பாக ஆடி வருகிறார். ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 100 விக்கெட்டை எடுத்துள்ளார். 30 வயதான மார்கல் 152 விக்கெட் (91 ஆட்டம்) எடுத்துள்ளார். 21 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சு ஆகும்.
சவுத்தி (நியூசிலாந்து):-
ஒருநாள் போட்டியில் அபாயகரமான தொடக்க வேகப்பந்து வீரர்களில் ஒருவர். 2011–ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பையில் சிறப்பாக பந்து வீசினார். 18 விக்கெட் கைப்பற்றினார்.
இதனால் சொந்த மைதானங்களில் இதை விட அபாரமாக வீசுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 2008–ம் ஆண்டு அவர் தனது 18–வது வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். சுவிங் பவுலிங் வீசுவதில் கெட்டிக்காரர். 26 வயதான டிம் சவுத்தி 85 ஒரு நாள் போட்டியில் விளையாடி 116 விக்கெட் – கைப்பற்றி உள்ளார். 33 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சு ஆகும். தரவரிசை: 27
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே