கபில்தேவ்- டோனி: சுவாரஸ்யமான ஒப்பீடு – ஒரு பார்வை…

இதுவரை 10 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 2 முறை (1983, 2011) உலக கோப்பையை வென்றுள்ளது. கபில்தேவ், டோனி ஆகியோர் பெருமை சேர்த்து கொடுத்தனர். சாதாரண குடும்பத்தில் பிறந்த இருவரும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் கனவை நனவாக்கியவர்கள். அரியானாவை சேர்ந்த கபில்தேவ் 1959–ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார். அவர் 1978–ல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 1982–ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றதால் இளம் வீரரான அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தது.

இங்கிலாந்தில் 1983–ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை கபில்தேவ் பெற்றுக் கொடுத்து சாதனை படைத்தார். 3–வது உலக போட்டியிலேயே சாம்பியன் பட்டம் பெற்றது சாதாரணமானது அல்ல. ஜாம்பவனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது புயல் வேக ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும். 138 பந்தில் 175 ரன் (16 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்தார். உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் இன்னும் அவர் தான் 2–வது இடத்தில் உள்ளார். உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான அவர் பந்துவீசும் தன்மையே தனி ஸ்டைலானது. கேப்டன் பதவியில் கபில்தேவ் எப்போதுமே உணர்ச்சிவசப்படக்கூடியவர். சக வீரர்களிடம் மென்மையாக பழகக்கூடியவர். அவருக்கும், அப்போதைய முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கும் இடையே அப்போதைய காலக்கட்டத்தில் கருத்து வேறுபாடு இருந்தது.
1987–ம் ஆண்டு நடந்த உலக கோப்பையிலும் அவர்தான் கேப்டனாக பணியாற்றினார். அரை இறுதி வரை சிறப்பாக விளையாடியது. இங்கிலாந்திடம் தோற்றதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. உலக கோப்பையில் 26 ஆட்டத்தில் விளையாடி 669 ரன் எடுத்திருந்தார். 28 விக்கெட் வீழ்த்தினார்.

1983 உலக கோப்பையை வென்ற பிறகு 28 ஆண்டு கால இந்தியாவின் கனவை நனவாக்கினார் டோனி. அவர் 1981–ம் ஆண்டு ஜூலை 7–ந்தேதி ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) பிறந்தார். தனது 23–வது வயதில் (2004) அவர் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 2007 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் அந்த ஆண்டு நடந்த 20 ஓவர் அறிமுக உலக கோப்பையில் சீனியர் வீரர்கள் ஆடவில்லை. இதனால் டோனிக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது. முதல் 20 ஓவர் கோப்பையை பெற்று கொடுத்ததால் அவர் புகழின் உச்சத்துக்கு சென்றார். இதனால் அனைத்து நிலைக்கும் கேப்டன் ஆனார்.
2011–ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிரான அவர் விளையாடிய ஆட்டம் மிகவும் அற்புதமானது. 79 பந்தில் 91 ரன் (அவுட்இல்லை) எடுத்து கோப்பையை வெல்ல காரணமாக திழ்ந்தார். பேட்டிங், விக்கெட் கீப்பர் பணியில் சிறப்பாக செயல்படுபவர். மேட்ச் வின்னர்களில் மிகவும் சிறந்தவர். எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார். அமைதியான போக்கை கொண்டவர். இதனால் தான் ‘கூல்’ கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். கடந்த காலங்களில் அவருடன் ஷேவாக், காம்பீர் ஆகியோருக்கு மோதல் இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தன.

இந்த உலக கோப்பைக்கும் (2015) 2–வது முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். கபில்தேவ் 2–வது முறை அரை இறுதி வரை கொண்டு சென்றார். டோனி எதுவரை அணியை கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் இருக்கிறது. கோப்பையா? 2–வது இடமா?, அரை இறுதியா? கால் இறுதியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.டோனி உலக கோப்பையில் 12 ஆட்டத்தில் விளையாடி 270 ரன் எடுத்துள்ளார். 12 கேட்ச் பிடித்துள்ளார். 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

கபில்தேவ்

அக்.1978: சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம். பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன் எடுத்தார். 1 விக்கெட் கைப்பற்றினார்.

நவ. 1978: கராச்சி டெஸ்டில் 33 பந்தில் அரைசதம்.

ஜன. 1979: முதல் டெஸ்ட் சதம்.

ஜூலை. 1979: முதல் முறையாக டெஸ்டில் 5 விக்கெட்டை கைப்பற்றினார்.

பிப்.1980: இளம் வயதில் (21) டெஸ்டில் 1000 ரன் மற்றும் 100 விக்கெட் (25 டெஸ்ட்).

பிப்.1981: காயத்துடன் விளையாடி மெல்போர்ன் மைதானத்தில் 5 விக்கெட் கைப்பற்றி வரலாற்று சிறப்பு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

செப்.1982: ஒருநாள் போட்டி கேப்டன்.

ஜூன் 1983: உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

டிச.1983: ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன் எடுத்த முதல் இந்தியர்.

பிப்.1986: ஒருநாள் போட்டியில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர்.

ஜன. 1987: டெஸ்டில் 300–வது விக்கெட்.

ஜன.1991: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை. (மகனாமா, ரவிரத்னா, ஜெயசூர்யா விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றினார்.)

அக்.1991: ஒருநாள் போட்டியில் 200–வது விக்கெட்.

பிப்.1994: ரிச்சர்டு ஹேட்லியின் சாதனையை (431 டெஸ்ட் விக்கெட்) முறியடித்தார்.

அக்.1994: கடைசி ஒருநாள் போட்டி.

டோனி

டிச.2004: வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம். ‘டக்அவுட்’ ஆனார்.

ஏப்.2005: தனது 5–வது ஆட்டத்தில் 123 பந்தில் 148 ரன் (பாகிஸ்தானுக்கு எதிராக) குவித்தார்.

அக். 2005: ஒரு போட்டியில் அதிக ரன். இலங்கைக்கு எதிராக 183 ரன் (145 பந்து) குவித்தார்.

டிச.2005: டெஸ்டில் அறிமுகம் (இலங்கைக்கு எதிராக)

ஜன.2006: டெஸ்டில் முதல் சதம் (153 பந்தில் 148 ரன். பாகிஸ்தானுக்கு எதிராக).

ஏப்.2006: ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம்.

செப்.2007: 20 ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். டிராவிட் பதவி விலகியதால் ஒருநாள் போட்டி கேப்டன் ஆனார்.

மார்ச். 2008: ஆஸ்திரேலியாவில் 3 நாடுகள் போட்டியில் சாம்பியன்.

நவ.2008: டெஸ்ட் கேப்டன் பதவி.

டிச.2009: டெஸ்டில் இந்தியாவை ‘நம்பர் 1’ இடத்துக்கு கொண்டு சென்றார்.

ஏப்.2011: உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

மார்ச் 2013: ஆஸ்திரேலியாவில் டெஸ்டில் ஒயிட்வாஷ் (0–4).

ஜூன். 2013: சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். 20 ஓவர், 50 ஓவர், உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஒரே கேப்டன்.

அக்.2014: சங்ககராவின் (அதிக ஸ்டம்பிங்) சாதனையை முறியடிப்பு.

செப்.2014: ஒருநாள் போட்டியில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago