செய்திகள்,திரையுலகம் தென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 படங்கள் – ஒரு பார்வை!…

தென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 படங்கள் – ஒரு பார்வை!…

தென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 படங்கள் – ஒரு பார்வை!… post thumbnail image
பொங்கல் விடுமுறை தினங்களில் ’ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் ரூ.135 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வினியோகஸ்தர்களின் பங்கு 70 கோடியாகும். விக்ரமின் முந்தைய படங்கள் இதுபோன்று வசூல் சாதனை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 சினிமாக்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.

முதல் இடத்தில் 2010 ல் வெளியான ரஜினிகாந்தின் எந்திரன் உள்ளது இது உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வசூல் செய்து உள்ளது இதில் வினியோகஸ்தர்களின் பங்கு 160 கோடியாகும். 2-வது இடத்தில் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த மகாதீரா இடம்பெற்று உள்ளது. 3-வது 4-வது இடத்தில் ரஜினிகாந்தின் சிவாஜி, லிங்கா படங்கள் உள்ளன.5 வது இடத்தில் பவன் கல்யாண் நடித்த அட்டரிண்டிகி டாரிடி உள்ளது. விக்ரமின் ஐ படமும் 6 வது இடத்தில் இடம்பெற்று உள்ளது. 7, 8 வது இடங்களில் நடிகர் விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்கள் உள்ளன, 9 வது இடத்தில் சூர்யாவின் சிங்கம் 2 உள்ளது. 10 வது இடத்தில் பவன் கல்யாணின் கப்பர் சிங் உள்ளது.

தெலுங்கில் ரிலீசான முதல் ஓரிரு தினங்களிலேயே ஐ ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ’மனோகருடு’ என்ற பெயரில் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியில் இதுவரை ரூ.9.15 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. ஐ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் டாப் தர வரிசையில் முன்னேறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி