கல்லூரி படிப்பை முடித்தப்பின் தேவாவின் பெற்றோர்கள் தேவாவிற்கு, அத்தை மகளான சஹானாவை வலுகட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குபின் இருவரும் கொடைக்கானலில் உள்ள எஸ்டேட் பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கு தேவாவின் எஸ்டேட்டை சரண் கவனித்து வருகிறான்.தேவா, மனைவி சஹானா மீது விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறான். காதலியான தர்ஷிதாவையே நினைத்து வருகிறான். தேவாவின் மனதை மாற்ற சஹானா முயற்சி செய்து வருகிறாள்.
ஒரு நாள் சஹானா தன் பங்களாவிற்கு பின்னால் உள்ள பாலடைந்த பங்களாவிற்கு செல்கிறாள். அங்கு வித்தியாசமான ஒரு உருவம் (ஆவி) மறைந்து செல்கிறது. பயந்து வீட்டிற்கு செல்லும் சஹானாவை அங்கேயும் பயமுறுத்துகிறது. மறுபக்கம் தேனி தொழில் அதிபர் ஒருவர் கொடைக்கானலுக்கு வந்துவிட்டு காணமால் போயிருக்கிறார் என்று போலீஸ் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஒருநாள் சஹானா கர்ப்பம் ஆகிறாள். பெற்றோர்கள் அனைவரும் சந்தோஷமடைகிறார்கள். ஆனால் தேவை இதை ஏற்க மறுக்கிறான். நான் இதுவரை சஹானாவை தொட்டதே இல்லை என்று கூறுகிறான். இதனால் சஹானா அதிர்ந்து போகிறாள்.உண்மையிலேயே சஹானா கர்ப்பத்திற்கு யார் காரணம்? தேவாவின் காதலி தர்ஷிதா என்ன ஆனாள்? அந்த மர்ம உருவம் எதற்கு சஹானாவை பயமுறுத்துகிறது? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தேவா நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகனுக்கு உண்டான தோற்றம் இவருக்கு பொருந்தாமல் இருக்கிறது. இவருக்கு நண்பராக சரண் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவருக்கும் கதாநாயகனுக்கு உண்டான சமமான கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். நாயகிகளாக நடித்திருக்கும் தர்ஷிதா மற்றும் சஹானா ஆகியோர் கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக தர்ஷிதா கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறார்.
திகில் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்திருக்கிறார். முதல் பாதி குழப்பத்திலேயே திரைக்கதை நகர்கிறது. லாஜிக் இல்லாத காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பார்க்கும்போது நிறைய கேள்விகள் மனதில் எழுகிறது. சொல்ல வருவதை தெளிவாக சொல்லியிருக்கலாம்.
சுனில் சேவியர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயபாலனின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அரூபம்’ பயம்……….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே