செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!… post thumbnail image
சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அன்று ரூ.21 ஆயிரத்து 56 ஆக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. 23ம் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 328 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.21 ஆயிரத்து 280 ஆனது.

இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.28 குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,632–க்கு விற்கிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பங்கு சந்தையில் அதிக முதலீடு காரணமாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெள்ளியும் விலை குறைந்துள்ளது. ரூ.995 குறைந்து ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.30–க்கு விற்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி