பார்ப்பதற்கு ரபீக் போலே இருக்கும் இவர், தலைவாசல் விஜய் நடத்தும் டிராமாவில் கலந்துக் கொண்டு சிறப்பாக நடித்து விட்டு சென்று விடுகிறார். நாடகம் முடிந்த பிறகு ரபீக் மருத்துவமனையில் இருப்பது தெரியவருகிறது. மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் தலைவாசல் விஜய், டிராமாவில் சிறப்பாக நடித்ததை பாராட்டுகிறார். ஆனால் ரபீக்கோ, நான் டிராமாவில் கலந்துக் கொள்ளவில்லை, எனக்கு அடிப்பட்டு விட்டது நான் காலையில் இருந்தே மருத்துவமனையில்தான் இருக்கிறேன் என்று கூறுகிறார். இதைகேட்ட தலைவாசல் விஜய், அப்போ டிராமாவில் கலந்துக் கொண்டவர் யார் என்று தெரியாமல் குழப்பத்தில் அதிர்ந்து போகிறார். அதன்பிறகு தன் நண்பரான பேய், பிசாசுகளை பற்றி ஆராயும் டாக்டர் தேவனிடம் இதைப் பற்றி கூறுகிறார். இருவரும் சேர்ந்து ரபீக் உருவத்தில் வந்தவர் யார் என்று ஆராய ஆரம்பிக்கிறார்கள்.
பின்னர் ரபீக் உருவத்தில் வந்தவர் ரபீக்கின் அப்பா என்று கண்டுபிடிக்கிறார்கள். மேலும் அவர் ரபீக்கின் ரத்தத்தை குடித்து காட்டேரியாக உருவெடுத்திருக்கிறார். இதனால் பல கொலைகள் நடக்க போகிறது என்றும் அதை உடனே தடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கிறார்கள்.ஆனால் ரபீக்கின் அப்பாவான காட்டேரி, நான்கு திருடர்கள் இருக்கும் வீட்டிற்கு அடைகலம் தேடி செல்கிறார். அவர்களிடம் எனக்கு ரத்தம் எடுத்து வந்து தாருங்கள். உங்களுக்கு திருட உதவி செய்கிறேன் என்று ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார். அவர்களும் காட்டேரிக்கு ரத்தவங்கியில் இருந்து ரத்தத்தை திருடி எடுத்து வந்து தருகிறார்கள். அதை குடித்து விட்டு அவர்களுக்கு பல வீட்டில் பணம் மற்றும் பொருட்களை திருட உதவி செய்து அவர்களுடன் திருட ஆரம்பிக்கிறார். மறுபக்கம் தேவன், தலைவாசல் விஜய், ரபீக் ஆகியோர் இந்த காட்டேரியை தேடிவருகிறார்கள். இறுதியில் அந்த காட்டேரியை தேடி கண்டுபிடித்து அழித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரபீக், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால் நடிப்பு தான் வரமாட்டேன் என்கிறது. இவருக்கு வலுவான கதாபாத்திரம், அதை உணர்ந்து கொஞ்சமாவது நடித்திருக்கலாம். பாகவதர் போல் முடிவைத்து காட்டேரி போல் நடித்திருப்பது எடுபடவில்லை.
நாயகி மீராவிற்கு படத்தில் வேலையே இல்லை. இரண்டு காட்சிகள், ஒரு பாடலுக்கு மட்டுமே வந்து செல்கிறார். பாதிரியாராக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், நடிப்பால் கவர்கிறார். அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார். காட்டேரிக்கு பயப்படும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
காட்டேரி கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் அலி அக்பர், அதில் லாஜிக் இல்லாத காட்சிகள், தேவையற்ற காட்சிகள் என திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதியில் சற்று நேரம் மட்டுமே சுவாரஸ்யமாக செல்கிறது. அதன்பிறகு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதாபாத்திரங்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காமெடி பெரியதாக எடுபடவில்லை. குமார் வால்சல் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் இசையில் பல படங்களின் சாயல் தெரிகிறது. ஜெகதீஸ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘அப்பாவி காட்டேரி’ காமெடி…………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே