1. லிங்கா :- எப்போதும் சூப்பர் ஸ்டார் தான் முதலிடம். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் முதல் வார முடிவில் சுமார் ரூ 86 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. ஆனால், இப்படம் எங்களுக்கு பெரிய நஷ்டத்தை தந்து விட்டது என்று விநியோகஸ்தர்கள் புலம்பி வருகிறது.
2. கத்தி :- ரஜினிக்கு அடுத்த இடத்தில் என்றும் விஜய் தான் போல, கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. கத்தி முதல் வார முடிவில் ரூ 71 கோடி வசூல் செய்துள்ளது.
3. எந்திரன் :- சில வருடத்திற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவே திரும்பி பார்த்த திரைப்படம் தான் எந்திரன். இப்படம் உலகம் முழுவதும் முதல் வார இறுதியில் ரூ 58 கோடி வசூல் செய்துள்ளது.
4. சிங்கம்-2 மற்றும் அஞ்சான் :- 4 மற்றும் 5 இடத்தை பிடிப்பது சூர்யா. இதில் சிங்கம்-2 மாபெரும் வெற்றி பெற்றது, அஞ்சான் நல்ல ஓப்பனிங் இருந்தாலும் வார நாட்களில் டல் அடிக்க, சமூக வலைத்தளங்களில் கிண்டல் கமெண்ட்டுகள் பரவ படம் தோல்வியை தழுவியது. சிங்கம்-2 ரூ 50 கோடி, அஞ்சான் ரூ 45 கோடி வசூல் செய்தது.
6. கோச்சடையான் :- ரஜினி அனிமேஷனில் நடித்தாலும் அந்த படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் இருக்க தான் செய்கிறது. இப்படம் சூப்பர் ஸ்டார் குரலுக்காகவே வார முடிவில் ரூ 42 கோடி வசூல் செய்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
7. ஆரம்பம் மற்றும் வீரம் :- கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் இந்த லிஸ்டில் கொஞ்சம் தள்ளி உள்ளார். இதில் ஆரம்பம் ரூ 40 கோடி, வீரம் ரூ 25 கோடி வரை வசூல் செய்தது. வீரம் படத்துடன் போட்டியாக இளையதளபதி விஜய் நடிப்பில் களம் இறங்கிய ஜில்லா படமும் ரூ 25 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
10. வேலையில்லா பட்டதாரி :- தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிட் கொடுத்த படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து அனைத்து செண்டர்களிலும் சக்கை போடு போட்டது. இப்படம் வார இறுதியில் ரூ 20 கோடி வசூல் செய்தது. இப்பட்டியல் சினிமா வட்டாரங்கள் கொடுத்த தகவலின் படி எடுக்கப்பட்டவை. மேலும், கடந்த வாரம் வெளிவந்த ஐ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே