இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டனும், கிப்சும் 235 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. முதலாவது சதத்தை சுவைத்த ரோசவ் 128 ரன்களில்(115 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறியதும், 39-வது ஓவரில் கேப்டன் டிவில்லியர்ஸ் களம் புகுந்தார். சூறாவளி போல் களத்தில் மையம் கொண்ட டிவில்லியர்ஸ், அதிரடியில் திக்குமுக்காட வைத்தார். சகட்டு மேனிக்கு சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அனுபவமற்ற எதிரணி கேப்டன் ஜாசன் ஹோல்டரின் இரு ஓவர்களில் 6 சிக்சர், வெய்ன் சுமித்தின் ஒரே ஓவரில் 4 சிக்சர் என்று வாணவேடிக்கை காட்டினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் விழிபிதுங்கி நின்றது மட்டுமே மிஞ்சம்.
பின்னியெடுத்த டிவில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் செஞ்சுரி போட்டு வரலாற்று புத்தகத்தை திருத்தி எழுதினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனின் 36 பந்துகளில் சதம் கண்டதே அதிவேக சதமாக இருந்தது. அதை மிக எளிதாக டிவில்லியர்ஸ் தகர்த்தெறிந்தார். அதன் பிறகும் அவரது ருத்ரதாண்டவம் அடங்கவில்லை. 2 பந்து மீதம் இருக்கையில் டிவில்லியர்ஸ் 149 ரன்களில் (44 பந்து, 9 பவுண்டரி, 16 சிக்சர்) கேட்ச் ஆனார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 439 ரன்களை குவித்தது. தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்த அம்லா 153 ரன்களுடன் (142 பந்து, 14 பவுண்டரி) களத்தில் நின்றார். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 291 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 148 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே