மேலும் நிக்கி கல்ராணி, ஜி.வி.பிரகாஷை ஒருதலையாக காதலித்து வருகிறார். ஒரு நாள் ஜி.வி. பிரகாஷ் தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்ற முடிவு வருகிறார். அதற்கு பாலா, தற்கொலை செய்வதற்குமுன் நிக்கி கிலானியை ஒரேயொரு முறை முத்தம் கொடுத்துவிட்டு வா என்று சொல்ல, ஜி.வியும் நிக்கி கிலானிக்கு முத்தம் கொடுக்க செல்கிறார்.அப்போது அந்த பங்களாவில் இருக்கும் ஒரு பேய், நிக்கி கல்ராணியின் உடம்பிற்குள் சென்று ஜி.வி.யை அடித்து துரத்துகிறது. இதை நண்பர்களான பாலா, கருணாசிடம் கூறுகிறார். அவர்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். இவர்களையும் பேய் வாட்டி எடுக்கிறது. நிக்கி கல்ராணியை ஜி.வி.பிரகாஷ் தொடும்போதெல்லாம் இந்த பேய் நிக்கி கல்ராணியின் உடம்பினுள் புகுந்துக் கொண்டு பேய் ஆட்டம் ஆடுகிறது.இதற்கிடையில் ஜி.வி.பிரகாசிற்கு நிக்கி கல்ராணி காதலித்து வருவது தெரிகிறது. ஜி.வி.க்கும் நிக்கி மீது காதல் ஏற்படுகிறது. தன் காதலை நிக்கியிடம் சொல்ல முயற்சிக்கும் போதெல்லாம் அந்த பேய் நெருங்க விடாமல் தடுக்கிறது. நிக்கி மீது பேய் இருப்பது கண்டு ஜி.வி.பிரகாஷ் வருந்துகிறார். அவளை காப்பாற்ற பேய்யை விரட்ட முயற்சி செய்கிறார். இந்த பேய் எதற்காக நிக்கி கல்ராணி உடம்பிற்குள் வருகிறது? பேயிடம் இருந்து இவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமே என்று தெரியாதளவிற்கு நடிப்பில் ஸ்கோர் பண்ணிருக்கிறார். தாடியுடன் வலம் வந்து பேய்க்கு பயந்து நடக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடியிலும் கலக்கியிருக்கிறார். கிளைமாக்ஸில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி மாஸ் ஹீரோ அந்தஸ்தை பெருகிறார். நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி ஆகியோர் பேய் ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். நண்பர்களாக வரும் பாலா, கருணாஸ் மற்றும் மந்திரவாதியாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பால் தியேட்டரில் சிரிப்பு அலை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடியில் கலம் இறங்கியிருக்கிறார் கருணாஸ். அவருக்கு இப்படம் நல்ல ரீஎன்ட்ரியாக அமைந்திருக்கிறது.சமீபகாலமாக பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதை புரிந்து கொண்ட இயக்குனர் சாம் ஆண்டன், வழக்கமான பேய் படங்கள் என்றாலே ஒரு பங்களா பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களுக்கு திகிலோடு சிரிப்பையும் வரவழைத்திருக்கிறார். காமெடிக்கு பஞ்சம் வைக்காமல் திரைக்கதையை நகர்த்தியிருப்பது அருமை.ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘டார்லிங்’ திகில் கலாட்டா………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே