ரொம்பவும், ரொமான்ஸ் விளம்பர படமான அதில் பாடி பில்டர் விக்ரமுக்கு தன் இஷ்ட மாடல் நடிகை தியா-எமியுடன் இணைந்து இஷ்டப்படி கட்டிப்பிடித்து நடிக்க கூச்சமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது அவரது கூச்சத்தை போக்கி, எமியை இயக்குநர், விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடி என அட்வைஸ் வைக்கிறார். இதற்கு முதலில் மறுக்கும் எமி, விக்ரம் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மீண்டும் ஜானுடன் இணைந்து நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலை தவிர்க்க விரும்பி விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடிக்கிறார். ஆரம்பத்தில் நான் கூவம் நீங்கள் கோபுரம் என எமியிடம் காதலிக்க மறுக்கும் விக்ரம் தன் இஷ்ட தேவதையே தன்னை காதலிப்பதாக தெரிந்ததும் டபுள் சந்தோஷத்தில் சகஜமாக இணைந்து நடிக்கிறார். இந்த விளம்பர படம் இயல்பாக வந்து அந்நிறுவன வியாபாரம் பெருக பெரிதும் உதவுகிறது. இதற்குள் விக்ரம் – எமிக்கிடையே மெய்யாலுமே காதலும் மலருகிறது. அதன்பின் ராசியான ஜோடியான விக்ரமும், எமியும் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்து மாடலிங் உலகில் கொடி கட்டி பறக்கின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஜான். அவரை மாதிரியே விக்ரம் மிஸ்டர் மெட்ராஸ் ஆனதால் பாதிக்கப்பட்டிருக்கிறார் பட்டினபாக்கம் ரவி.
விக்ரம் – எமியின் நிஜக்காதலால் விக்ரம் மீதான தன் ஒரு தலைக்காதல் பாதிக்கப்பட்ட வருத்தத்தில் இருக்கிறார் விக்ரமின் காஸ்ட்லி மேக்கப்மென் அண்ட் வுமன், நச்சு தன்மையுள்ள குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்து, அதுப்பற்றி தொலைக்காட்சிகளில் பேட்டியும் கொடுத்த விக்ரமால் பெரிதும் நஷ்டமடைகிறார் விக்ரமை வளர்ந்துவிட்ட தொழில் அதிபர் ராம்குமார். எமி ஜாக்சனின் பேமிலி டாக்டர் சுரேஷ் கோபிக்கு விக்ரமால் எமி மீது தனக்கு இருக்கும் வயதுக்கு மீறிய காதல் நிறைவேறாமல் போகும் வருத்தமும் இருக்கிறது. இந்த ஐந்து பேரும் சேர்ந்து வெளி உலகுக்கு தெரியாமல் விக்ரமை ஒழித்துகட்ட போடும் திட்டம் தான் ஐ எனும் வைரஸ்… சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்படும் ஐ வைரஸ் விக்ரமின் உடம்பிற்குள் அவருக்கே தெரியாமல் ஊசி மூலம் ஏற்றப்பட, விளம்பரப் படவுலகில் முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் முடி இழந்து முகம் இழந்து, பல் இழந்து, சொல் இழந்து கூன் விழுந்து, கொடூரமாக மாறுகிறார். எமியுடன் திருமணம் நடக்க இருக்கும் தருவாயில் கார் விபத்தில் இறந்ததாக கணக்கு காட்டிவிடடு, தன் பால்ய சிநேகிதன் சந்தானத்தின் உதவியுடன் தன் இந்த நிலைக்கு காரணமான ஐவரையும் அவர்கள் பாணியிலேயே கொலை செய்ய பிளான் செய்து நிலைகுலைய வைக்க எடுக்கும் அவதாரமும் ஆக்ரோஷமும் தான் ஐ படம் மொத்தமும்…
விக்ரம் வழக்கம்போலவே வித்தியாசமும் விறுவிறுப்பும் காட்டி அதற்கும்மேலே கிட்டத்தட்ட உயிரையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஜிம்மில் ஆரம்பத்தில் பளு தூக்கும் கம்பியின் இருபுறமும் ஆஜானுபாகுவான ஆட்கள் தொங்க அவர் பாடி பில்டர்களை அடிக்கும் அதிரடி ஃபைட்டில் தொடங்கி கூன் முதுகுடன் ஓடும் ரயிலில் மாடல் ஜானுடன் சண்டை போடுவது வரை… ஆக்ஷனில் ஜாக்கிஜானாக தூள் படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் படமென்றாலும் ஷங்கர் படமென்பதால் ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. எமியுடன் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் மனிதர். பாடல் காட்சிகளிலும் விக்ரம் பளிச். ஒருத்தன் வாழ்ந்தால் யாருக்கும் பிடிப்பதில்லை… எனும் பஞ்ச் வசனங்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒவவொரு கெட்-அப்பிலும் விக்ரம் உயிரை கொடுத்து நடித்திருப்பது அவரது நடை-உடை-பாவனைகளில் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிவது ஐ யின் பெரும் பலம். எமிஜாக்ஸன் இங்கிலாந்து பெண்ணா, இந்திய நடிகையா?…
எனக்கேட்கும் அளவிற்கு இயல்பாக, இளமையாக, இனிமையாக இருக்கிறார். சந்தானம் தான் இதுமாதிரி சீரியஸ் சப்ஜெக்டுகளை போரடிக்காமல் எடுத்து செல்ல சரியான சாய்ஸ் என்பதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஐந்து வில்லன்களும் விக்ரமின் அதிரடியால் கெட்-அப் மாறியதும் அவர்களை தினுசு தினுசாக நக்கல் அடித்து வெறுப்பேற்றுவதில் தொடங்கி ஒவ்வொரு சீனிலும் சந்தானம் என்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. அப்ளாஸ் அள்ளுகிறது. மேக்அப் போட்டவுடன் மெசேஜ்…என விக்ரமை, சந்தானம் கிண்டல் அடிப்பதில் தொடங்கி ஒவ்வொரு சீனிலும், யதார்த்தமாக காமெடி பண்ணுவதில் சந்தானத்திற்கு நிகர் சந்தானம் தான். படத்தில் ஐ வைரஸால் ஹீரோ விக்ரமின் முதுகெலும்பு வளைந்துபோகிறது… ஐ எனும் வினோதமான எழுத்து மாதிரியே விக்ரமின் முகமும் அடிக்கடி மாறிப்போகிறது. ஆனாலும், சந்தானத்தின் சரவெடி காமெடி பஞ்சுக்கள் தான் சீரியசான, சுமார் ஐ படத்தை முதுகெலும்பாக இருந்து போரடிக்காது தூக்கி நிறுத்தி இருக்கிறது என்பதை தியேட்டரில் சந்தானம் வரும் சீனின் போதெல்லாம் பறக்கும் விசில் சப்தங்கள் உறுதி செய்கிறது. கிட்டத்திட்ட தொழில்அதிபர் விஜய் மல்லையா கெட்-அப்பில், நடிகர் திலகத்தின் மூத்தவாரிசு ராம்குமார், நல்ல தனத்திலும், வில்லத்தனத்திலும் சபாஷ் வாங்கிவிடுகிறார். அதிலும், லட்சம் தேனீக்கள் கொட்டி உடம்பெல்லாம் வீங்கிய நிலையில் சந்தானத்தின் வாய்ஸ்படி பிள்ளையார் மாதிரி இருந்த நீங்க…பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை மாதிரி கெட்-அப்பில் தியேட்டரில் கெக்கே பிக்கே சிரிப்பை ஏற்படுத்துகிறார்.
இவர் தயவில்தானே தியா- எமி ஜாக்சனும் பிரபல மாடல் ஆனார்…அப்புறம் ராம்குமாரிடம் எமி எப்படி? தப்பித்தார்..? எனும் கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இருந்தால் சரி!. ராம்குமார் மாதிரியே , விக்ரமுக்கு மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் அணிவிக்கும் மாஜி மிஸ்டர் மெட்ராஸ் சரத்குமார் பவர்ஸ்டார், மாடலிங் கோஆர்டினேட்டர் மாயா, விக்ரமின் அப்பா, அம்மா, கலா, வில்லன்கள் புதுமுகம் ஜான் எமியின் ஃபேமிலி டாக்டராக வந்து அதுக்கு மேல…மேல என்றபடி விக்ரமின் உடம்பில் ஐ வைரஸை செலுத்தும் சுரேஷ்கோபி, அந்த மேக்கப் மேன் -உமன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஏ.ஆர். ரகுமானின் இசையில் மெர்சலாயிட்டேன், பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டால் நீ இல்லாத உலகத்தில் நான் வாழமாட்டேன் ஒவ்வொரு ராகம், பி,.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, அழகிய, அயல்நாட்டு லொகேஷன்களுடன் ஐ யை மேலும் , மேலும் நம் ஜனங்களுக்கு விருந்து ஆக்குகிறதென்றால் மிகையல்ல.ஷங்கரின் இயக்கத்தில் ஒரு இடத்திலும் ஓட்டை விழாத கோட்டை விடாத ஸ்கிரின்பிளே சூப்பர். விக்ரம் நச்சு தன்மையுள்ள குளிர்பானத்தில் நடிக்க மாட்டேன் என்று வேறு ஒரு ஹீரோவை தாக்குவது மாதிரியான டயலாக் பேசுவது..உள்ளிட்ட குறைகளை களைந்து விட்டு பார்த்தால் ஐ ரொம்பவே ஹை.
மொத்தத்தில் ‘ஐ’ பிரம்மாண்டம்…………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே