நாயகன் ஆரியனுக்கு படத்தில் ஒரு சிறு வசனம்கூட கிடையாது. கிழிந்த சட்டையுடன், அழுக்கு முகமாக பார்க்கும் இவரை பார்க்கவே முடியவில்லை. பிச்சைக்காரனுக்குண்டான முகத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மதன், அக்ரஹாரத்து பையனாக வருகிறார். இவரது முகத்தில் நடிப்பு வர ரொம்பவும் தயங்குகிறது. நாயகிகளாக வரும் இருவரின் தோற்றத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. இவர்களது நடிப்பும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இப்படத்தின் கதையை ஒரு சில நிமிடங்களில் கூறிவிடலாம். ஆனால், அதை இரண்டே கால் மணி நேர சினிமாவாக எடுத்து நம்மை ரொம்பவும் வெறுப்பேற்றியிருக்கிறார் இயக்குனர் முனிசங்கர்.
கதைக்கு பொருந்தாத காட்சிகளே படத்தில் அதிகம். நிறைய இடங்களில் காமெடி என்கிற பெயரில் இவர் ஆங்காங்கே வைத்திருக்கும் காட்சிகள் வெறுப்பைத்தான் தருகின்றனவே தவிர சிரிப்பை வரவழைக்கவில்லை.முதல் இரண்டு காட்சியிலேயே படத்தை பார்க்க முடியாமல் தியேட்டரை விட்டு எழுந்து சென்றவர்களும் உண்டு. அந்த அளவுக்கு படத்தில் ஒரு காட்சியும் ரசிக்கும் படியாக இல்லை. அதே போல், கதையையும் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார். சொல்ல வந்த கதையை விட்டு விட்டு எதை, எதையோ காண்பித்து படம் பார்ப்பவர்களை ரொம்பவும் குழப்பமடைய வைத்திருக்கிறார்.
ரவிகிரண் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. ராஜசேகரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.
மொத்தத்தில் ‘கிழக்கே உதித்த காதல்’ காதல்……………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே