அப்போதுதான் பிரபல ஆராய்ச்சியாளரான வில்லனைச்சந்திக்கிறார். வில்லன், விக்ரமை ஒரு சர்வதேச மாடலாக மாற்ற ஒரு மருந்தைத் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறான். அவனை நம்பும் விக்ரம் அந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார். வில்லன் கூறியதுபோலவே, விக்ரம் அழகான இளைஞராக மாறிவிடுகிறார்.அதன்பின் புது விக்ரம் மீது எமிக்கு காதல் வந்துவிடுகிறது. இருவரும் வெறித்தனமாக காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த மருந்தின் பின் விளைவுகளால் விக்ரம் கொடூரமானவராக மாறுகிறார். எமியிடம் இருந்து விலகி, தனக்கான மருந்தை தேடி அலைகிறார். இப்போதுதான் உண்மையான பிரச்சனையே உண்டாகிறது. வில்லன் எமியைக்காதலித்தவர். விக்ரம் போனதும் எமியிடம் தன்னைக் காதலிக்குமாறு சொல்கிறார்.
ஆனால் விக்ரமைக் காதலிப்பதால் அதை மறுத்துவிடுகிறார். கடுப்பான வில்லன், இவள் அழகாய் இருப்பதால் தான் இவ்வளவு திமிராய் இருக்கிறாள் என்றெண்ணி, அவளுக்கும் விக்ரமுக்கு கொடுத்த மருந்தை கொடுத்து விகாரமாக்க நினைக்கிறான்.இதை அறிந்துகொள்ளும் விக்ரம், அதிலிருந்து எப்படி எமியைக் காப்பாற்றி தானும் பழைய நிலைமைக்கு மாறினாரா..? இல்லை வில்லன் அந்த மருந்தை எமிக்கு கொடுத்தாரா..? என்பதே படத்தின் மீதிக்கதை. இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் ‘ஐ’. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும் ஒல்லியாக மாற்றியும், பின்னர் திடகாத்திரமாகவும் மாற்றி நடித்திருக்கிறார். ‘மதராசப் பட்டிணம்’ படத்தின் ஆங்கிலேய நாயகி எமி ஜாக்சன் விக்ரம் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்த விமர்சனம் ட்ரைலரை வைத்துப் பார்க்கும்போது, திரையிலும் இந்த கதை தான் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. பொங்கல் வரைப் பொறுத்திருந்து ‘ஐ’ படத்தின் டெக்னீசியத்தை ரசிக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே