உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!

சென்னை :- 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தப்போட்டி தொடங்க இன்னும் 33 தினங்கள் உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 14 நாட்டு அணி (இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான்) வீரர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்தப்போட்டியில் முன்னணி வீரர்கள் பலருக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த உலககோப்பையில் தொடர் நாயகன் விருதை பெற்ற யுவராஜ்சிங் மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணியில் உள்ள பிராவோ, போல்லார்ட், இங்கிலாந்து கேப்டனாக பணியாற்றிய கூக் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

2011–ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் யுவராஜ்சிங். 9 ஆட்டத்தில் 362 ரன் குவித்தார். 15 விக்கெட் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். மோசமான ஆட்டம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவருக்கு ரவிந்திர ஜடேஜா காயம் மூலம் உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

இதற்கு ஏற்ற வகையில் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் சதம் அடித்தார். ஆனாலும் தேர்வு குழு அவரை நிராகரித்துவிட்டது.

வெஸ்ட்இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்கள் வெய்ன் பிராவோ, போலார்ட். இருவரும் நீக்கப்பட்டது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சம்பள பிரச்சினை தொடர்பாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் போக்கை கடை பிடித்ததே நீக்கத்துக்கு காரணமாகும்.

தென்ஆப்பிரிக்கா பயணத்தில் பிராவோ முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது உலக கோப்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த இருவரும் இல்லாதது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பாதிப்பே.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியோடு அணியில் இருந்தும் நீக்கப்பட்டவர் கூக் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததோடு அவரது பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதனால் தான் அவர் நீக்கப்பட்டு மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதேபோல பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவரான உமர்குல்லும் உலக கோப்பையில் இடம் பெறவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணம் அடையவில்லை. உடல் தகுதி இல்லாததால் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் விக்கெட் கீப்பரும், முன்னணி பேட்ஸ்மேனுமான கம்ரன் அக்மலும் நீக்கப்பட்டார்.

இதேபோல ரியான் ஹாரிஸ் (ஆஸ்திரேலியா), அஜந்தா மெண்டீஸ் (இலங்கை), ஜிம்மி (நியூசிலாந்து), ராபின் பீட்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago