கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததால் சிங்களர்களின் ஆதரவுடன் ராஜபக்சே எளிதில் வெற்றி பெற்று மீண்டும் அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.
ஆனால் அந்த தவறை தமிழர்கள் இந்த முறை செய்யவில்லை. இந்த தேர்தலில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகம் வசிக்கும் தமிழர்கள் ராஜபக்சேவுக்கு தங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவித்தார்கள். வாக்குச்சாவடிக்கு திரளாக சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதேபோல் கடந்த ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடைபெற்றது. அதை கட்டுப்படுத்த அதிபர் ராஜபக்சே தவறிவிட்டதாக முஸ்லிம் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது. அவர்கள் தங்கள் அதிருப்தியை இந்த தேர்தலில் காட்டி உள்ளனர்.
மேலும் ராஜபக்சேயின் சர்வாதிகார போக்கும், குடும்ப அரசியலும் அவர் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராஜபக்சேயின் ஒரு தம்பி கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாகவும், மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே பொருளாதார துறை மந்திரியாகவும் இருந்தனர். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகளிடம் மட்டுமின்றி ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் ராஜபக்சே அரசில் இருந்து சிறிசேனா உள்பட சில மந்திரிகளும், கட்சியில் இருந்து சில எம்.பி.க்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.ராஜபக்சேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், பல அடிப்படை கட்டுமான திட்டங்களில் பெருமளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டியது. மேற்கண்ட காரணங்களால் ராஜபக்சே தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே