அந்த தேடுதலில் அவனுக்கு பல வகைகளில் மோர்கன் தொல்லை கொடுக்கிறாள். இதனால் தந்தையை தேடும் கலாஹத்தின் முயற்சிக்கு தடை ஏற்படுகிறது. இந்நிலையில் கலாஹத்துக்கு சிலர் உதவ முன்வருகிறார்கள்.அந்தக் குழுவில் உள்ள ஒரு பெண்ணை கலாஹத் காதலிக்கிறான். இவர்கள் அனைவரும் இணைந்து லான்ஸ்லட்டை தேடி புறப்படுகிறார்கள். அவர்களுக்கும் மோர்கன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறாள்.இறுதியில், இந்த தடைகளையெல்லாம் மீறி கலாஹத் தனது தந்தையை கண்டுபிடித்தானா?, ராஜ்ஜியத்தை மோர்கனிடமிருந்து மீட்டானா? இல்லையா? என்பதே மீதிக்கதை. சரித்திரப் படங்களுக்கு முக்கியத் தேவையான அரசர் கால உடைகள் இப்படத்தில் அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. தீய சக்தியான மோர்கன் பாறையின் மீது வாளால் மந்திரத்தை எழுதி டிராகனை எழுப்புவது, டிராகன்களின் தாக்குதல் போன்ற காட்சிகள் கிராபிக்ஸ் என்பதை மறந்து நம்மை ரசிக்க வைத்தாலும், படத்தில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை.
இதுபோன்ற கதைக்களத்தில் நாம் ஏற்கனவே நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்த்துள்ளதால், சில காட்சிகளை தவிர அடுத்து நடக்கப்போவது அனைத்தையும் நம்மால் யூகிக்கி முடிகிறது. இதுவே படத்திற்கு பெரும் பலவீனம்.மேலும் காட்சிகளின் நம்பகத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. உதாரணமாக டிராகன் மலையை விட்டு வெளியேறும் காட்சியில் அதன் வயிற்றில் ஏற்படும் நிற மாற்றங்கள், சக்திமான் தொடரில் வருவதுபோல் வாளை மேலே தூக்கினால் பச்சை கலரில் மின்னுவது போன்ற காட்சிகள் அடிக்கடி ‘அவதார்’ படத்தை பார்த்த நம் தமிழ் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.
மக்கள் தற்போதும் பேண்டஸி வகைத் திரைப்படங்களை விரும்புகிறார்கள் என்பது உண்மை தான் ஆனால் அந்த பேண்டஸியிலும் ஒரு யதார்த்தமும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதைத்தான் இந்த படத்திலும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மொத்தத்தில் ‘வேதாளக் கோட்டை’ பிரம்மாண்டம்…………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே