ஒருகட்டத்தில் அந்த போலீஸ்காரர் நண்பர்களில் ஒருவனை பிடித்து என்கவுண்டர் செய்ய முயற்சி செய்கிறார். இதிலிருந்து தப்பித்து செல்லும் அவன் தன் நண்பர்களை தேடி புதியதாக வந்தவன் போலீஸ் என்றும் அவன் என்னை என்கவுண்டர் செய்ய முயற்சி செய்ததாகவும் கூறுகிறான். அதிர்ச்சியான நண்பர்கள் ஏன் உன்னை என்கவுண்டர் செய்யணும் என்று கேட்கிறார்கள். அதற்கு அவன், நான் திருடி மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்து வந்தேன். இது போலீசுக்கு தெரிந்து விட்டது ஆதலால் என்னை என்கவுண்டர் செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறான்.அப்போது மற்ற நண்பர்களும், இதேபோல் நாங்களும் தான் செய்து வருகிறோம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஐந்து பேரும் அவரவர் செய்யும் திருட்டுகளை தெரிந்துக் கொள்கிறார்கள். நாம் அனைவருக்கும் திறமை இருக்கிறது என்று கூறி அனைவரும் சேர்ந்து பெரிய தொகையை திருடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதன்பின் புதியதாக இணைந்த போலீஸ்காரரையும் அடித்து மிரட்டி இவர்கள் செய்யும் திருட்டுக்கு உடந்தையாக்குகிறார்கள். இந்த ஆறு பேரும் இணைந்து பெரிய தொகையை திருடி வாழ்க்கையில் செட்டிலானார்களா? அல்லது போலீசிடம் மாட்டினார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நண்பர்களாக நடித்திருக்கும் அனைவரும் ஏற்கனவே பழகிய முகங்கள். மற்ற படங்களில் கதாநாயகனுக்கு நண்பர்கள் மற்றும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர்கள் அனைவருக்கும், இந்த படத்தின் கதைக்கருவை தாங்கி நிற்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை திறம்பட செய்யத்தான் அவர்களால் முடியவில்லை.கதாநாயகியாக நடித்திருக்கும் அமித்தா, நண்பர்கள் வசிக்கும் டீக்கடைக்கு பால் பாக்கெட்டுகள் போடும் பெண்ணாக நடித்திருக்கிறார். அதுவும் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும்தான் வருகிறார். வேறு வேலை எதுவும் நடிகைக்கு தரவில்லை.வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ராகவேந்திரா, அதற்கு தகுந்த திரைக்கதையமைக்காமல், சிறந்த கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாமல் சொதப்பியிருக்கிறார். படம் முழுக்க சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து ஏதாவது ஒரு திருப்பம் வரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சீரியசாக சொல்ல வந்த காட்சிகள் கூட காமெடியாக அமைந்திருக்கின்றன.ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிக்குட்டியின் ஒளிப்பதிவு வித்தியாசமான கோணங்களில் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘விஷயம் வெளிய தெரியக்கூடாது’ பொழுது போக்கு…………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே