இதன்பின்னர் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2011–ம் ஆண்டு செப்டம்பர் 1–ந்தேதி திருப்பதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையும் சரியாக அமையாததால் 2 பேரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவுக்கு இஸ்லாமிய மதத்தின்மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல் ஹாலிக் என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை பின்பற்றி 5 வேளை தொழுகை நடத்தி வரும் யுவன் அப்துல் ஹாலிக்கிற்கும் கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஜபருன்னிசா ஆடை வடிவமைப்பாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29–ந்தேதி சென்னையில் நடந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில் இளையராஜா குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட யுவனின் திருமணம் திடீரென்று மாற்றப்பட்டு கீழக்கரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அப்துல் ஹாலிக்கான யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஜபருன்னிசாவுக்கும் நேற்று மாலை கீழக்கரை அருகே உள்ள செங்கல் நீரோடை கிராமத்தில் அமீர் பைசல் கார்டன் பகுதியில் ரகசியமாக திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்புடன் யாரும் நுழைந்துவிடாதபடி நடந்த இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே