12 படங்கள் மட்டுமே கணிசமாக லாபம் ஈட்டியுள்ளது. 20 படங்கள் வரை கஷ்டம் இல்லாமல் ஓரளவு வசூல் ஈட்டியுள்ளது. தரமான கதையொடு வந்த சிறு பட்ஜெட் படங்கள் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் வசூலில் சக்க போடு போட்டுள்ளது. அஜீத்தின் வீரம், விஜய்யின் கத்தி, ஜில்லா மற்றும் விஷாலின் பூஜை படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோலிசோடா படம் கணிசமாக வசூல் ஈட்டியது. சிறுவர்களை வைத்து இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். தனுசின் வேலையில்லா பட்டதாரி படம் மெகா ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களும் அதிக லாபம் பார்த்தார்கள்.
யாமிருக்க பயமே பேய் படம் நிறைய வசூல் குவித்தது. நட்டு நட்ராஜ் நடித்த சதுரங்கவேட்டை, பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் மற்றும் தெகிடி படங்களும் லாபம் ஈட்டின. ஆர்யாவின் மீகாமன், ஷங்கர் தயாரித்த கப்பல், பிரபு சாலமனின் கயல், விக்ரம் பிரபு நடித்த வெள்ளைக்கார துரை படங்கள் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கின்றன. இப்படங்களும் லாபம் ஈட்டி தரும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் நஷ்டம் அடைந்தது. லிங்கா படம் டிசம்பர் 12–ந் தேதி ரஜினியின் பிறந்த நாளில் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்த படத்தால் நஷ்டமடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் வேந்தர் மூவிஸ் இதனை மறுத்துள்ளது.சூர்யாவின் அஞ்சான், ஜூவாவின் யான், ஜெயம் ரவியின் நிமிர்ந்துநில் படங்கள் மெகா பட்ஜெட்டில் வெளிவந்தன.ஆனால் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் குவிக்க வில்லை என கூறப்படுகிறது.சுந்தர்.சியின் அரண்மனை பேய் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் ஈட்டியது.இது போல் விமல் நடித்த மஞ்சப்பை, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி, ஜீவா படங்களும் கனிசமான லாபம் ஈட்டின. மெட்ராஸ், என்னமோ நடக்குது, குக்கூ, ஜிகர்தண்டா, அரிமா நம்பி, நாய்கள் ஜாக்கிரதை, திருடன் போலீஸ் படங்களும் வசூல் ஈட்டின.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே