விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் விருதை வழங்கினார். விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, ‘இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன்’ என்றார். பின்னர் அவர் முதல்– மந்திரி சந்திரசேகரராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகர ராவ் எடுத்துக்கொண்ட முயற்சியை அமித்தாப்பச்சன் பாராட்டினார்.
மேலும் தெலுங்கானா முதல் மந்திரியாக பதவி ஏற்றதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஐதராபாத் நகரம் இன்டர்நேசனல் நகரமாக மாறவும், மாநில வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று சந்திரசேகரராவிடம் அமிதாப் உறுதி அளித்தார். ஐதராபாத் புறநகரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக பிரமாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமிதாப்பிடம் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே