மேலும், இந்த படத்தை வெளியிட்டால் அதைப் பார்ப்பவர்கள் அனைவரும் கசப்பான விதியை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கை விடுத்து இ-மெயில்களையும் அவர்கள் அனுப்பி வைத்தனர். இது வடகொரியா அரசின் கைவரிசை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்நிலையில், தி இன்டர்வியூ படத்தை வெளியிடுவதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதே நேரம், இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபடவில்லை என்று வடகொரியா அரசு மறுத்தது. எங்கள் மீதான இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிரூபிக்காவிட்டால் இரு நாடுகளின் கூட்டு விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும் என்றும் வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு கமிஷன் கேட்டுக்கொண்டு இருந்தது. இதனிடையே, சோனி பிக்சர்சின் இணையதளத்தை வடகொரியா முடக்கியதற்கும், அந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்ததற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கியதை நான் ஒரு போர் நடவடிக்கையாக கருதவில்லை. எனினும், கம்ப்யூட்டர் வழியாக நடத்தப்பட்ட மிகப் பெரியதொரு தாக்குதலாக இதனை எண்ணுகிறேன்.இது திட்டமிட்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதல். வடகொரியாவின் இத்தகைய செயல் மிகவும் கண்டனத்துக்கு உரியது.இதனால் தீவிரவாதத்தை பரப்புகிற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவைச் சேர்ப்பதா? இல்லையா? என்பதை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை வடகொரியா முடக்கியதற்கு ஜப்பானும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது பற்றி ஜப்பான் அமைச்சரகத்தின் செயலாளர் யோஷிடே சுகா கூறுகையில், இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை அளிக்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே