ராஜ்குமார் ஹிரானி, இந்த படத்திலும் சமூக கருத்துகளை புகுத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ள போதிலும், அவரின் முந்தைய படைப்பான லகே ரகோ முன்னாபாய் அளவிற்கு இந்த படம் இல்லை என்றே கூறவேண்டும். பிகே படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், படத்தின் வேகத்திற்கு தடையாக அமைவதோடு மட்டுமல்லாது, ரசிகர்களை, தங்கள் இருக்கையை விட்டு வெளியேறும்படி செய்து விடுகிறது. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தபோதிலும், எடிட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லாதது, படத்திற்கு பெரிய மைனஸ்சாக உள்ளது. பின்னணி இசை, படத்திற்கு மிகப்பெரும் பலம். கதை மற்றும் திரைக்கதை, ரசிகர்களை, பல இடங்களில் படத்தில் ஒன்றாமல் செய்துவிடுகிறது. வசனங்கள், ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. போஜ்புரி மொழியிலான வசனங்கள், ரசிகர்களிடம் ஒன்றவில்லை. காஸ்டியூம் மற்றும் ஆர்ட், படத்திற்கு பின்னடைவை தருகின்றன.
அமீர் கானின் நடிப்பு இந்த படத்திலும் மிளிர்கிறது. ஒவ்வொரு பிரேமிலும், அமீரின் நடிப்பு, அவரின் உழைப்பை காட்டுகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில், அமீரின் உணர்ச்சிமிக்க நடிப்பு கச்சிதம்…அமீர் உடன் அனுஷ்கா சர்மாவின் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட், சிறிதுநேரமே வந்தாலும், அவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போமன் இரானி மற்றும் சவுரப் சுக்லா கதாபாத்திரங்களும் சிறியதாகவே இருந்தாலும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான நடிப்பில் சஞ்சய் தத் நடித்துள்ளார், ரன்பீர் கபூரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. நல்ல சினிமா விரும்புபவர்களுக்கு, பிகே படம், சிறப்பான விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் பி.கே பொழுதுபோக்கு…………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே