போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு அபராதம்!…

சென்னை:-சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் ஜெய். சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஜெய் பங்கேற்றார். பின்னர் ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் காரில் சென்றார்.

காரை அவரே ஓட்டினார். மயிலாப்பூர் திருவள்ளூவர் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். ஜெய் காரையும் நிறுத்தினார்கள். காரில் இருப்பது ஜெய் என்பது தெரியாமல் அவரிடம் போதை ஆசாமிகளை கண்டு பிடிக்கும் நவீன கருவியில் ஊதச்சொன்னார்கள். அக்கருவி ஜெய் குடித்து இருப்பதாக காட்டியது. இதையடுத்து வாகனத்தை ஓரம் கட்டச் செய்து ஜெய்யை கீழே இறக்கினார்கள். போதையில் கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் வித்தனர்.

அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டனர். அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடித்தார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் அவர் சிக்கியதையும் தெரிந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரை தவிர்க்க ஜெய் போலீசாரிடம் அவசரமாக அபராத ரசீதை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago