தீபாவளியையொட்டி ரஜினி ரசிகர்கள் அவரை சந்திக்க ஏராளமானோர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வேன், கார்களில் வந்து இருந்தனர். போலீசாரும் பாதுகாவலர்களும் கூட்டத்தினரை தடுப்பு வளையம் அமைத்து கட்டுப்படுத்தினர்.தீபாவளிக்கு தலைவரை பார்க்க வந்து இருக்கிறோம். அவரை சந்திக்காமல் செல்லமாட்டோம் என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இதுகுறித்த தகவல் வீட்டுக்குள் இருந்த ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினி, ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கிருந்த உயரமான மேடையில் ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். கோஷங்கள் எழுப்பினர். எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் என்று ரஜினி சொன்னார். பதிலுக்கு ரசிகர்களும் தீபாவளி வாழ்த்து கூறினார்கள். சிறிது நேரம் அங்கு நின்று ரசிகர்களை சந்தித்து விட்டு வீட்டுக்குள் சென்றார்.
பிறகு ரசிகர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.ரஜினி ஏற்கனவே 2011-ல் தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சந்தித்தார். அப்போது ரசிகர்களிடம் சிகரெட் பழக்கத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதனை வலியுறுத்துகின்றனர். சமீபத்தில் லிங்கா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது ரஜினி அரசியல் பற்றி பரபரப்பான கருத்தை வெளியிட்டார். அரசியலுக்கு வரப் பயப்பட வில்லை என்றும் தயக்கமாக இருக் கிறது என்றும் கூறினார். நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே உத்வேகத்துடன் நாளை மறுநாள் லிங்கா பட ரிலீசையும், ரஜினி பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வரு கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம் ரசிகர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த ரஜினி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது ரசிகர்கள் ஆசீர்வாதத்தாலும் பிரார்த்தனையாலும் ரஜினி குணமடைந்தார். கடந்த வாரம் பெங்களூர் வந்த போது ரசிகர்களை சந்திக்கும்படி கூறினேன். அவரும் சரி என்று சொல்லி இருக்கிறார். ரசிகர்களை சந்திக்கும் இடத்தை அவரே விரைவில் அறிவிப்பார் என்றார். ஜனவரி மாதம் இறுதியில் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிகிறது. மேலும் சத்தியநாராயணா கூறியதாவது:-
ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இருக் கிறார். ஆன்மீகத்தில் இருப்ப வர்கள் நியாயமாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்தால் அப்படி இருக்க முடியாது என்பது சந்தேகம், எனவே தான் தயங்குகிறார். பாபாவின் சீடர் மூலம் ரஜினி தீட்சை பெற்றுள்ளார். தீட்சை பெற்றவர்கள் பொய் சொல்லக் கூடாது. அரசியிலில் இருந்தால் பொய் சொல்ல வேண்டிவரும். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே