இந்நிலையில், மோசே எகிப்தியன் அல்ல… யூத இனத்தைச் சேர்ந்தவன் என்பது ரமோசஸுக்கு தெரியவர, அவனை நாடு கடத்துகிறார்கள். பல துன்பங்களுக்குப் பிறகு வேறாரு குழுவிடம் தஞ்சமடையும் மோசே, அங்கிருக்கும் சேஃபோராவை (மரியா வால்வர்டே) திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழிக்கிறான். 9 வருடங்களுக்குப் பிறகு அவன் முன் தோன்றும் கடவுள், உன்னை நம்பியிருந்த மக்களை விட்டுவிட்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாயே… இது நியாயமா?… உனக்கு நான் உதவி செய்கிறேன் நீ அவர்களை மீட்டு வா… என உத்தரவிடுகிறார். தன் மனைவி, குழந்தையைப் பிரிந்து மீண்டும் எகிப்தை நோக்கிப் பயணிக்கிறான் மோசே. அதன் பிறகு அத்தனை லட்சம் மக்களை எப்படி எகிப்திய படைகளிடமிருந்து மோசே மீட்டு வருகிறான் என்பதுதான் ‘எக்ஸோடஸ்’ படத்தின் கதை.படத்தின் முதல் 1 மணி நேரம் எந்தவித ஆச்சரியங்களும் இல்லாமல் மெதுவாக நகர்கிறது. எகிப்துக்குள் மோசே மீண்டும் நுழையும் போதுதான், படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.
அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் விஷுவல் விருந்து. குறிப்பாக பல லட்சம் தவளைகள், வெட்டுக்கிளி, பூச்சிகள் அந்நாட்டுக்குள் புகுந்து அட்டூழியதும் செய்வது, பனிக்கட்டி மழை பொழிவது, பிளேக் போன்ற நோய் தாக்குவது என ஒவ்வொன்றும் அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல் யூதர்களைத் தேடி எகிப்திய படைகள் மலை உச்சியின் ஒற்றையடிப்பாதையில் பயணிக்கும்போது, மண் சரிவு ஏற்பட்டு பல வீரர்கள் மாண்டுபோகும் காட்சி உச்சபட்ச கிராபிக்ஸ் ரகளை.க்ளைமேக்ஸில் கடல் உள்வாங்குவதையும், மிகப்பெரிய ஆழிப்பேரலை ஒன்று தோன்றி எகிப்தியர்களைப் பந்தாடுவதையும் 3டியில் பார்க்கும் ரசிகர்களை உறைய வைத்திருக்கிறது. இறுதியில் அனைத்து மக்களையும் காப்பாற்றி தன் மனைவியின் இருப்பிடத்திற்கு மோசே கூட்டி வருகிறான். அப்போது யார் இவர்கள்?.. என சேஃபோரா கேட்க, இவர்கள் என் மக்கள் என மோசே சொன்னதும் மொத்த அரங்கமும் கைதட்டி ஆமோதித்தது.கண்களுக்கு விருந்து படைத்திருக்கும் இந்த ‘எக்ஸோடஸ்’ திரைக்கதையிலும், லாஜிக் விஷயங்களிலும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். அதோடு இரண்டரை மணி நேரம் ஓடும் இப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் ரசிகர்களை சோதிக்கவே செய்கிறது. க்ளைமேக்ஸை தவிர்த்த மற்ற காட்சிகளில் பெரிதாக ‘சென்டிமென்ட்’ அட்டாச்மென்ட் இல்லை! அதேபோல் பின்னணி இசையும் இப்படத்திற்கு சற்று பின்னடைவுதான். ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், 3டி விஷுவல்கள் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களில் உயர்தரம்.
மொத்தத்தில் ‘எக்ஸோடஸ்’ பிரம்மாண்டம்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே