சிம்ஹா பேய் இல்லை என்றும் கோகுல் மற்றும் நண்பர்கள் பேய் இருக்கிறது என்றும் பேசுகிறார்கள். இதற்கு சிம்ஹா பேய் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டினால் என் சொத்து மதிப்பில் பாதி அதாவது 60 கோடி ரூபாய் தருகிறேன். அப்படி காட்டாவிட்டால் நான் இழந்த என் பைக் மட்டும் தந்தால் போதும் என்று பெட் கட்டுகிறார்.
இதற்கு கோகுல், பாலா மற்றும் மேக்னா ஆகியோர் பணத்திற்கு ஆசைப்பட்டு பேய் இருப்பதை நிரூபித்து காட்டுகிறோம் என்று பேயை தேடி அலைகிறார்கள். முதலில் நடுக்கடலில் பேய் ஒன்று இருப்பதாக அறிந்து அங்கு செல்கிறார்கள் ஆனால் அங்கு பேய் இருப்பதற்கான ஆதாரத்தை பதிவு செய்ய முடியவில்லை. பிறகு ஜப்பான் செல்கிறார்கள் அங்கும் பேய்க்கான ஆதாரங்களை பதிவு செய்ய முடியவில்லை. இப்படி பல இடங்களுக்கு சென்று பேய் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரிக்க அலைகிறார்கள்.
பேய் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரிக்க சென்ற கோகுல், பாலா, மேக்னா ஆகியோர் என்ன ஆனார்கள்..? சிம்ஹாவிடம் இருந்து 60 கோடி பெட்டிங் பணத்தை அவர்கள் வென்றார்களா..? சிம்ஹா பெட்டிங் மூலம் தனது பைக்கை மீட்டாரா..? என்பதே படத்தின் மீதிக்கதை.
பல படங்களில் தன் நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் சிம்ஹா, இப்படத்தில் பெட் வைத்து பொழுதை கழிக்கும் பணக்காரனாக வாழ்ந்து வருபவராக சிறப்பாக நடித்திருக்கிறார். அம்புலி படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக வலம் வருகிறார் கோகுல். தன் கதாபாத்திரத்திற்கு அவர் மெருகேற்றியிருக்கிறார் என்றே சொல்லலாம். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து பாராட்டு பெற்று வந்த பாலா தற்போது சீரியஸ் காட்சிகளிலும் நடித்து பாராட்டு பெற்றிருக்கிறார். படத்தில் மேக்னா பணம் பணம் என்று அலைவது மாதிரி கதாபாத்திரம் அமைத்திருக்கிறார்கள். நடிப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் ரசிக்கலாம்.
தற்போது காமெடி கலந்த பேய் படங்களை ரசிகர்கள் ரசித்து வரும் வேளையில், தகுந்த நேரத்தில் படத்தை வெளியிட்டு ரசிகர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஹரி, ஹரிஷ். தற்போது உள்ள தொழில் நுட்பங்களை வைத்து திகில் படத்திற்குண்டான அனைத்து அம்சங்களை வைத்து திகிலூட்டியிருக்கிறார்கள். பேய் இருப்பதற்காக ஆதாரங்களை சேகரிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
திகில் படத்திற்கு உண்டான பின்னணி இசையை கே.வெங்கட்பிரபு ஷங்கர், சி.எஸ்.சாம் ஆகியோர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். சதீஷின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் ‘ஆ’. மர்மமாக …
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே