தகுதி சுற்றின் அடிப்படையில் ராஸ்பெர்க் முதல் வரிசையிலும், ஹாமில்டன் 2-வது வரிசையில் இருந்தும் காரை இயக்கினர். ஆனால் பாதியில், ராஸ்பெர்க்கின் காரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர் பின்தங்க நேரிட்டது. இதனால் ஹாமில்டன் சிக்கலின்றி வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 39 நிமிடம் 02.61 வினாடிகளில் கடந்து அசத்தினார். வெற்றிக்குரிய 50 புள்ளிகள் அவருக்கு கிடைத்தன. இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும். பிரேசில் வீரர் பெலிப் மாசா 2-வதாக வந்தார். ராஸ்பெர்க்கால் 14-வது இடமே பெற முடிந்தது. 19 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 384 புள்ளிகள் குவித்து ஒட்டுமொத்த பார்முலா1 கார்பந்தய சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். ராஸ்பெர்க் 317 புள்ளிகளுடன் 2-வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சியர்டோ 238 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர். நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 167 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
29 வயதான ஹாமில்டனுக்கு இது 2-வது பட்டமாகும். ஏற்கனவே அவர் 2008-ம் ஆண்டிலும் உலக பார்முலா1 மகுடத்தை சூடியிருந்தார். இதன் மூலம் இந்த பட்டத்தை 2 முறை ருசித்த 4-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இது எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் என்று ஹாமில்டன் பெருமிதத்துடன் கூறினார்.அணிகளுக்கான சாம்பியன்ஷிப்பில் மெர்சிடஸ் அணி 651 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ரெட்புல் அணி 373 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பெற்றன. அடுத்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்படும். முதலாவது போட்டி 2015-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே