தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்: நடிகை ஸ்ரீதிவ்யா விளக்கம்!…

சென்னை:-நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘காக்கிசட்டை’, ‘பென்சில்’, ‘வெள்ளைத்துரை’, ‘ஈட்டி’ படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே காட்டுமல்லி, நகர்புறம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த படங்களில் நடிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதிவ்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–நான் எல்லா படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. காட்டுமல்லி படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் அதன் படப்பிடிப்பு திடீரென நின்று போனது.

படப்பிடிப்பு குழுவினரிடையே நடந்த குழப்பங்களால் படவேலைகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதன்பிறகு தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. அதனால் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க போய்விட்டேன். ‘காட்டுமல்லி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago