83க்குப் பிறகே தமிழ்ப் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமே சுமார் 125 படங்களுக்கும் மேல் நடித்தவர் ஸ்ரீதேவி. தற்போது, 28 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பமான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, மகாராணி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் கதையைக் கேட்டதுமே ஸ்ரீதேவி நடிக்க சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். ஸ்ரீதேவியை மகாராணியாக மிகவும் அழகாக காட்டுவதற்கென்றே தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார்களாம்.
ஸ்ரீதேவியின் ஆடை அலங்கார வடிவமைப்பை பிரபல நிபுணரான மனீஷ் மல்கோத்ரா செய்கிறார். எந்திரன் படத்திற்குப் பிறகு தமிழில் அவர் பணிபுரியும் படம் இது. ஃபேன்டஸி கதையான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் என்றும், ஹன்சிகாவிற்கு அம்மாவாக நடிக்கிறார் என்றும் இருவேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஸ்ரீதேவி நடிக்கும், அம்மா கதாபாத்திரத்திற்கே அள்ளி அள்ளி செலவு செய்கிறார்கள் என்றும் சொல்லி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே