இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர்.இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.பின்னர், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அதிபர் ராஜபக்சே ஆலோசித்து வருவதாகவும் அந்நாட்டின் அமைச்சர்கள் தெரிவித்தனர்.பொதுமன்னிப்பு வழங்கும்பட்சத்தில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை வாபஸ் பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசும், இலங்கை அரசும் எந்த விதமான தகவல்களை தெரிவிக்கவில்லை.
மீனவர்கள் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் 15 பேர் நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர்.இதற்கிடையில், மத்திய அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திடீரென வாபஸ் பெற்றது. இதையடுத்து மீனவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட தமிழக மீனவர்களின் மரண தண்டனையை அதிபர் மகிந்த ராஜபக்சே ரத்துசெய்து விட்டதாகவும், இதனையடுத்து, சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட அவர்கள் ஐவரும் தலைநகர் கொழும்புவில் உள்ல இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், விடுதலையான இந்த 5 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே