ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த தொடருக்கு முன்பு 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்த இந்திய அணி தொடரை 5-0 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ செய்ததன் மூலம் மொத்தம் 117 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 115 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு இறங்கி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு சரிவு கண்டு இருக்கிறது. இலங்கை அணி 108 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்து அணி 107 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 98 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 96 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 96 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்காளதேச அணி 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி 58 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளன.தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. எஞ்சிய ஆட்டங்களின் முடிவை பொறுத்து இரண்டு அணிகளில் ஒன்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago