ஒவ்வொரு கிரகத்தின் கால நேரத்திலும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பது அந்தந்த கிரகத்திற்குள் செல்ல முயலும்போதுதான் கூப்பருக்குத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு கிரகத்திற்குள் சென்று மனிதன் வாழ்வதற்கு தகுதியானது என்பதை அறிந்து கொள்வதற்கு உள்ளே செல்ல வேண்டுமென்றால், அந்த கிரகத்தில் செலவழிக்கும் ஒரு மணி நேரம் என்பது பூமியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஏழு வருடங்கள். இதனால் அங்கு கழியும் ஒவ்வொரு நிமிடமும் பூமிக்கு திரும்புவதற்கான நாட்களை தின்று கொண்டேயிருக்கும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தன் குடும்பத்தை திரும்பவும் பார்க்க முடியுமா என்ற பயத்தோடும், கவலையோடும் வேறுவழியின்றி அந்த கிரகத்திற்குள் நுழைகிறார்கள் கூப்பர் உள்ளிட்ட டீம். அதன் பிறகு நடப்பவை அனைத்துமே நம்மால் யூகிக்க முடியாத, அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களாக இருக்கிறது. முடிவில் மனிதன் வாழ்வதற்கு தகுதியான இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்தார்களா?… இல்லையா?…. என்பது படத்தின் கிளைமேக்ஸ்.
சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கே உரிய வழக்கமான கதைதான் என்றாலும், அதில் நோலன் ‘டச்’ திரைக்கதை யுக்தியாலும், திகட்டாத சென்டிமென்ட் காட்சிகளாலும் வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது இந்த ‘இன்டர்ஸ்டெல்லர்’.சில இடங்களில் நம் அறிவுக்கும், சிந்தனைக்கும் எட்டாத விஷயங்களை ‘இனடர்ஸ்டெல்லர்’ பேசி போரடிக்க வைத்தாலும், அடுத்தடுத்த சில நொடிகளிலேயே அதையெல்லாம் நோலனின் மேஜிக் மாற்றிவிடுகிறது. இப்படத்தின் டெக்னிக்கல் விஷயங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரின் இசையும் சரி, Hoyte van Hoytema ஒளிப்பதிவும் சரி, இருவருக்கும் ராயல் சல்யூட் வைக்கலாம். ‘கிராவிட்டி’ படத்திற்கு இணையாக இப்படத்திலும் விண்வெளிக் காட்சிகளை கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள். அற்புதம். ‘டல்லஸ் பையர்ஸ் கிளப்’பில் ஆஸ்கர் விருதை வென்ற மைக்கேல் கெயின், ‘இன்டர்ஸ்டெல்லரி’ன் கூப்பர் கதாபாத்திரத்துக்காக மீண்டும் ஒரு ஆஸ்கரை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அலட்டல் இல்லாத அற்புதமான நடிப்பு. அதிலும் விண்வெளியில் இருந்தபடியே தன் மகளின் வீடியோ பேச்சைக் கேட்கும்போது அவர் அழுது, தியேட்டரில் இருக்கும் மொத்த ரசிகர்களையும் அழ வைத்துவிடுகிறார்.
அவர் மட்டுமின்றி மற்ற கதாபாத்திரங்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக திடீர் வில்லனாக திரையில் தோன்றி அசத்தியிருக்கிறார் ‘போர்ன்’ படத்தொடர் நாயகன் மேட் டேமன். எவ்வளவு பிரம்மாண்டமான படமாக இருந்தாலும் சரி, அதில் படத்தோடு ரசிகனை ஒன்ற வைக்கும் ‘எமோஷன்’ இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களே தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறது. இந்த சூட்சமத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். கிராபிக்ஸ் யுக்தியாலும், டெக்னிக்கல் விஷயங்களாலும், திரைக்கதை மேஜிக்காலும் ஆச்சரியம் ஏற்படுத்தும் பல காட்சிகள் இப்படத்தில் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி அப்பா – மகளின் பாசப் போராட்டம் என்பதே இப்படம் முழுக்க வியாபித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸில் நீண்ட வருடங்கள் கழித்து அப்பா கூப்பரும், மகள் மர்ஃபும் சந்தித்துக் கொள்ளும் அந்த காட்சி… வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்ச்சிக் காவியம்.
மொத்தத்தில் ‘இன்டர்ஸ்டெல்லர்’ அற்புதம்…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே