கிக்,தூம் 3 சாதனைகளை முறியடிக்க முடியாமல் போன ஹேப்பி நியூ இயர்!…

மும்பை:-சமீபத்தில் வெளிவந்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது. இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த படம், ரிலீசான முதல் வாரத்திலேயே ரூ.157.59 கோடியை வசூலித்தது. அதிக வேகமாக 100 கோடி கிளப்பில் இணைந்ததும் ஹேப்பி நியூ இயர் படம் தானாம்.

உலக அளவிலும் பெரிய தொகையுடன் வசூல் வேட்டையை துவக்கி உள்ள படமும் இது தானாம். இத்தனை சாதனை செய்திருந்தாலும், சல்மான் கானின் கிக் படத்தின் சாதனையையும், அமீர் கானின் தூம் 3 படத்தின் சாதனையையும் ஹேப்பி நியூ இயரால் முறியடிக்க முடியவில்லையாம். ஹேப்பி நியூ இயர் ரிலீசான முதல் வாரத்திலேயே ரூ.157.59 கோடியை வசூலித்திருந்தாலும், சல்மான் கான் நடித்த கிக் படம் முதல் வாரத்தில் ரூ.164.10 கோடியை வசூலித்துள்ளது.

அதே சமயம் தூம் படத்தின் 3வது பாகமான தூம் 3 படத்தின் முதல் வார வசூல் ரூ.188.95 கோடி. உலக அளவில் அதிக எதிர்பாப்பையும், வரவேற்பையும் பெற்றிருந்தாலும், பல சாதனைகளை படைத்திருந்தாலும் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான கிக் மற்றும் தூம் 3 படங்களின் சாதனைகளை ஹேப்பி நியூ இயரால் முறியடிக்க முடியவில்லை என்பது தான் பாலிவுட்டின் பேச்சாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago