கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்னதாகவே தற்போது பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தர ஆவலாக நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.ஐ.டி. மாணவர்களை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்க, முன்னதாகவே நேர்காணல் நடத்தும் நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட மாணவர்களுக்கு 20 சதவீதம் அதிகமாக வேலை வாய்ப்புகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் தெரிவிக்கையில், முன்னதாக நடத்தப்பட்ட நேர்காணல் மூலம் ஏற்கனவே 125 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நேர்காணலுக்கு வந்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை சம்பளத்தை அதிகரித்துள்ளன. தற்போது அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பில் ஒரு மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.சர்வதேச அளவில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், முதல் முறையாக மாணவர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்க பல நிறுவனங்கள் இறுதிக்கட்ட நேர்காணலுக்காக ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் மேம்பாட்டு மைய தலைவர் பாராய், இந்த ஆண்டு முதல் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பெருநிறுவன பயிற்சி மையங்கள், மதிப்பீட்டு சோதனைகள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல் அமர்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago