இதற்கு பின் இத்தாலிக்கு செல்லும் கதையில் கயிட்லின் என்னும் கல்லூரி மாணவியும், பட்டர்பீல்ட் என்னும் பழமையான பொம்மைகளை ஆய்வு செய்யும் நபரும், அமானுஷ்ய பொம்மைகளை சேகரிக்கும் வழக்கம் உடைய லோர்கா, அவருடைய காதலி லாராலைன், வளர்ப்பு மகன் டேவிட், அசாதாரண சக்திகளை கொண்ட லிலித் ஆகியோருக்காக ஒரு கோட்டைக்கு வெளியே காத்திருக்கின்றனர். கோட்டைக்குள் இருக்கும் டிவோலேட்டோ என்னும் எதிர்மறை சக்தி கொண்ட அமானுஷ்ய பொம்மை தானாக அசைவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, லோர்காவை அந்த கோட்டைக்கு வருமாறு அழைத்துள்ளார் கயிட்லின்.லோர்காவின் கார் ஓட்டுனர் எரிக், மரப்பெட்டிக்குள் இருக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் பொம்மைகளை கோட்டைக்குள் கொண்டுவருகிறார். அப்போதுதான் அந்த விசித்திரமான பொம்மைகளை லோர்காதான் பணம் கொடுத்து வாங்கியுள்ளார் எனத் தெரிகிறது. வினோத கோட்டைக்குள் நுழைந்தவர்கள் ஸ்டீல் பெட்டிக்குள் இருந்த டிவோலேட்டோ பொம்மை அசைவதை பார்த்துகொண்டிருக்கும்போது, அங்கு வரும் எரிக் கார் பழுதடைந்துவிட்டதால் இன்று இரவு திரும்ப முடியாது எனக் கூறுகிறார். அதனால் வேறு வழியின்றி அனைவரும் அன்று இரவு அந்த கோட்டையில் தங்குகின்றனர்.
அதன்பின் லோர்காவின் காதலி லாராலைன், எரிக்கை காதலிப்பதும் அவர்கள் இருவரும் டிவோலேட்டோ பொம்மையை எடுத்துச்செல்ல வந்திருப்பதும் தெரிகிறது. அனைவரும் தூங்க சென்ற பின் உயிர்பெறும் டிவோலேட்டோ பொம்மை, கோட்டையில் இருக்கும் பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் அமானுஷ்ய பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கிறது.யாரும் இல்லாத நேரத்தில் டிவோலேட்டோ பொம்மையை எடுக்க போலியான பொம்மையோடு வரும் எரிக்கை, பேபி டெய்ஸி ஓப்ஸி, ஜாக் அட்டாக் பொம்மைகள் கழுத்தை அறுத்து கொலை செய்கின்றன.அசாதாரண சக்திகளை கொண்ட லிலித்திற்கு அமானுஷ்ய பொம்மைகள் கோட்டையில் தங்கியிருப்பவர்களை கொலை செய்வதுபோல காட்சிகள் தோன்றுகிறது. லிலித்திற்கு தோன்றியதுபோல லோர்கா மற்றும் அவரது காதலி என ஒருவர் பின் ஒருவராக அனைவரையும் ரத்தம் தெறிக்க கொடூரமாக அமானுஷ்ய பொம்மைகள் கொலை செய்கின்றன.
அந்த பொம்மைகள் ஏன் கோட்டைக்குள் இருப்பவர்களை கொல்கின்றன? மீதமுள்ளவர்கள் இந்த பொம்மைகளின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? என்பது மீதி கதை.20 ஆண்டுகளாக திகில் படங்களை எடுத்துள்ள இயக்குனர் மற்றும் எழுத்தாளர் வில்லியம் பட்லருக்கு ஒரு திகில் படத்தை எப்படி இயக்கவேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.வித்தியாசமான அமானுஷ்ய கதையை பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் இப்படம் மிக நீளமாக உள்ளது. படத்தின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அசாதாரண சக்திகளை கொண்ட லிலித் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் செலன் லூனாவின் நடிப்பு மிகவும் நகைப்புக்குரியதாக உள்ளது.
மொத்தத்தில் ‘பேய் பொம்மைகள்’ மிரட்டல்…………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே