‘கத்தி’ படத்தை தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிக்க ரீமேக் செய்து வெளியிட்டால் மாபெரும் வெற்றியைப் பெறலாம் என முடிவெடுத்த அவர் படத்தை இரு தினங்களுக்கு முன் அவருக்கு திரையிட்டும் காட்டினார்.படத்தைப் பார்த்த பவன் கல்யாண் இயக்குனர் முருகதாசையும், விஜய்யையும் வெகுவாகப் பாராட்டினாராம். விஜய்க்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தையும் மீறி நல்ல படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தின் ரீமேக்கில் நடிக்க அவர் தயங்குகிறார் என்றும் சொல்கிறார்கள்.
அவருக்கு இருக்கும் இமேஜுக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என அவர் நினைக்கிறாராம். பவன் கல்யாண் அடுத்து ‘கப்பார் சிங்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நாயகனாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி அவரே இயக்கினால் அவருக்கிருக்கும் வேலைகளில் ‘கத்தி’ படத்தை இப்போது ஆரம்பிக்க முடியாது. இருந்தாலும் பவன் கல்யாண் சம்மதித்தால் மட்டுமே ‘கத்தி’ படம் ரீமேக் ஆக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து பதினான்கு வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘குஷி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்த பிறகுதான் அவருக்கு அங்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்து முன்னணி நடிகராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்காத பட்சத்தில் விரைவில் ‘கத்தி’ படத்தை டப்பிங் செய்து வெளியிடுவார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே