இதில் தொடக்கம் முதலே சானியா ஜோடி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. எதிராளியால் இவர்களின் ஒரு சர்வீசை கூட முறியடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் சானியா-காரா பிளாக் கூட்டணி 6-1, 6-0 என்ற நேர் செட்டில் பெங்-சு வெய் இணையை பந்தாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஒரு மணி நேரத்திற்குள் மோதல் முடிவுக்கு வந்தது. 27 வயதான சானியா மிர்சா கவுரவமிக்க இந்த போட்டிக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும். முதல் வாய்ப்பிலேயே அசத்தி விட்டார். 42 ஆண்டு கால பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்தத்தில் இது சானியாவின் 22-வது சர்வதேச இரட்டையர் பட்டமாகும். அதே சமயம் காரா பிளாக் ஏற்கனவே 2007, 2008-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் லீசல் ஹூபருடன் இணைந்து இந்த பட்டத்தை வென்றிருந்தார்.
கால்இறுதி மற்றும் அரைஇறுதியில் சானியா-பிளாக் இணை தோல்வியின் விளிம்பில் அதாவது எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்துகளில் இருந்து மீள்வதற்கு பெரும் யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. ஆனால் இறுதி சுற்றில் அவர்களுக்கு துளியும் போராட்டம் இல்லை. சானியா கூறுகையில், ‘உங்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்குவது தான் டென்னிஸ். அந்த வாய்ப்பில் நீங்கள் உங்களது முழு போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதைத் தான் நாங்கள் நிரூபித்து இன்று கோப்பையை வென்றிருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம். காரா பிளாக் ஒரு சிறந்த சாம்பியன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனது சகோதரி மாதிரி. அவருடன் இணைந்து மீண்டும் விளையாடுவேனா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அவருடனான எனது நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கும்’ என்றார்.2013-ம் ஆண்டு இறுதியில் காரா பிளாக்குடன் கைகோர்த்த சானியா மிர்சா அவருடன் இணைந்து விளையாடிய கடைசி தொடர் இது தான்.
35 வயதான காரா பிளாக்குக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடுவதற்காக 2015-ம் ஆண்டு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க பிளாக் முடிவு செய்திருக்கிறார். இதனால் அவரை விட்டு விலகும் சானியா மிர்சா, இந்த போட்டியில் தன்னிடம் உதை வாங்கிய சீனத்தைபேயின் சு-வெய் ஹூசையுடன் 2015-ம் ஆண்டில் இணைந்து விளையாட திட்டமிட்டு இருக்கிறார்.காரா பிளாக் கூறுகையில், சானியாவுடன் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி, இப்போது வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறேன். இந்த ஆண்டு எங்களுக்கு வியப்புக்குரிய ஆண்டாக அமைந்திருக்கிறது. அது மட்டுமின்றி எங்களிடையே உருவாகிய நட்புறவு இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் இதுவே நாங்கள் இணைந்து ஆடிய கடைசி போட்டி என்று நினைக்கும் போதும் வருத்தமளிக்கிறது. ஆனாலும் இந்த தருணத்தை அவருடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சிக்குரியது என்றார்.
இந்த வெற்றியின் மூலம் சானியா-காரா பிளாக் ஜோடிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையும், 1,500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே