தமிழ் பட இயக்குனர்கள் ஒரு காலகட்டத்தில் வெளிநாடு சென்று படப்பிடிப்பு செய்தபோது பாரதிராஜா யாரும் பார்த்திராத ஒரு கிராமத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார். தன்னுடைய சாதனைகளுக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றவர். காதல் கதைகளையும் சமூக சிந்தனை உள்ள திரைப்படங்களையும் இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று பாராட்டியது.
விழாவில் சிறப்புரை ஆற்றிய பாரதிராஜா, சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. திருமணம் ஆகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நல்ல பெயர் எடுப்பதைபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர்.மேலும், தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்த இயக்குனர் பாரதிராஜா, தன் தாயின் ஆதரவும் ஆசியுமே தன்னுடைய வெற்றிக்கு காரணம். தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் மூளை போற்றப்படும். உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பெரும் பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்க இதுவே காரணம் என்றார்.
சென்னையில் இருந்து காணொளி மூலம் அமெரிக்க சங்க தலைவர் முனைவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி, பாரதிராஜாவின் சாதனைகளை பாராட்டினார். அமெரிக்காவில் உள்ள மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மருத்துவர் சுந்தர் செல்வராஜ் மற்றும் மருத்துவர் மதன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாவில் அமெரிக்க தமிழ் சங்கம் சார்பாக பாரதிராஜாவுக்கு தமிழ் ரத்னா விருது வழங்கபட்டது. கவிஞர் அருள் வீரப்பன், எட்கர் ரொசாரியோ, ரமேஷ் ராமநாதன் ஆகியோர் இயக்குனர் பாரதிராஜாவை வாழ்த்தினார்கள்.அமெரிக்க தமிழ் சங்க துணை செயலர் வீராகுமார், நியூஜெர்சி தமிழ் சங்க வெள்ளி விழாவில் கலந்துகொள்ள வந்த இயக்குனர் பாரதிராஜா நியூயார்க் வந்தது அவரது ரசிகர்களின் பாசமே காரணம் என்றார்.சங்க பொருளாளர் கோஷி ஊமன் இயக்குனர் பாரதிராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்க செயலர் ஜெயசுந்தரம் வரவேற்புரை வழங்க, துணை தலைவர் கலை சந்திரா நன்றி கூறினார்.விழாவில் தீபாவளியை முன்னிட்டு வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இயக்குனர் பாரதிராஜாவுடன் புகைப்படம் எடுத்து கொள்ள விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே