ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!…

சென்னை:-திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை மஞ்சு வாரியர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது.ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா நடிப்பில் தமிழிலும் ரீ-மேக்காகிறது. திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்படத்தின் மூலம் தனது செகன்ட் இன்னிங்ஸை தொடங்குகிறார்.

மஞ்சு வாரியரை போன்று இப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரியாகிறார் ஜோதிகா. மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் சூர்யாவின் 2டி பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தமிழில் ரீமேக் ஆவதை அடுத்து ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது.

ஹிந்தியில் இப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க, அவரது மனைவி கஜோல் நடிக்க இருக்கிறார். அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த கஜோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் ரீ-எண்ட்ரியாகிறார். இப்படி ஒரே படத்தின் மூலம் மூன்று பிரபல ஹீரோயின்கள் சினிமாவில் ரீ-என்ட்ரியாவது ஆச்சர்யம்தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago