விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் தவறி விழுந்து பலி!…

திருவனந்தபுரம்:-நடிகர் விஜய் நடித்த கத்தி படம் தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று ரிலீசானது. இதுபோல கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. தமிழகத்தைப்போல கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் படம் வெளியாகும் நாளில் தியேட்டர்கள் முன்பு பிரமாண்ட கட்–அவுட்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைத்து கொண்டாடுவது வழக்கம்.

கத்தி படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வெளியானதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயபாரத் தியேட்டரில் நேற்று கத்தி படம் வெளியானது. இதையொட்டி அப்பகுதி ரசிகர்கள் தியேட்டர் முன்பு விஜய்யின் பிரமாண்ட கட்–அவுட் வைத்திருந்தனர்.

படம் முடிந்ததும், வடக்கஞ்சேரியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது 28) என்ற ரசிகர் ஆர்வ மிகுதியில் கட்–அவுட் மீது ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கட்–அவுட்டில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உன்னிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன உன்னிகிருஷ்ணன் வெல்டிங் தொழிலாளி ஆவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago