இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில்
மெட்ராஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
4.
ஜீவா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த
ஜீவா திரைப்படம் சென்னையில் மொத்தம் 76 ஷோவ்கள் ஓடி ரூ.5,79,285 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
3.
யான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த
யான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ.9,05,656 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.
அரண்மனை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த
அரண்மனை திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.14,38,136 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.
1.
மெட்ராஸ்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த
மெட்ராஸ் திரைப்படம் சென்னையில் மொத்தம் 176 ஷோவ்கள் ஓடி ரூ.34,88,730 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.